பொது செய்தி

தமிழ்நாடு

மக்களே.. மாஸ்க் அணிந்து ஓட்டுப்போடுங்கள்: சுகாதாரத்துறை செயலர்

Updated : ஏப் 05, 2021 | Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
சென்னை: தேர்தலில் மக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து ஓட்டுப்போட செல்ல வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.சென்னை தேனாம்பேட்டையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் நாளான நாளை (ஏப்.,6) மக்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்து ஓட்டுப்போட போகவேண்டும். மாஸ்க் இல்லையெனில் ஓட்டளிக்க
Radhakrishnan, Mask, Election, Vote

சென்னை: தேர்தலில் மக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து ஓட்டுப்போட செல்ல வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தல் நாளான நாளை (ஏப்.,6) மக்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்து ஓட்டுப்போட போகவேண்டும். மாஸ்க் இல்லையெனில் ஓட்டளிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அங்கு அனைவருக்கும் உடல்வெப்ப பரிசோதனை செய்யப்படும். இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் படிப்படியாக உயர்ந்து 85 ஆயிரம் சோதனைகளில் 3,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்.,7ம் தேதிக்கு பிறகு வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனையை முழுவீச்சில் செய்ய உள்ளோம்.


latest tamil news



தமிழகத்தில் மத்திய அரசிடம் இருந்து 54 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்தாலும், 32 லட்சம் டோஸ் மட்டுமே போடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தால் தடுப்பூசி போடுவது குறைந்துள்ளது. 2வது டோஸ் தடுப்பூசி செலுத்திய 14 நாட்களுக்கு பிறகு 75 முதல் 80 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் தீவிர பாதிப்பு இருக்காது. எனவே 45 வயதுக்கு மேற்பட்டோர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.

அதிகமானோர் கூடும் கலாசார நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். வரும் 6ம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம். தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை. 7ம் தேதிக்கு பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.SRIRAM - CHENNAI,இந்தியா
05-ஏப்-202123:43:24 IST Report Abuse
C.SRIRAM இந்த கொரோன காலத்தில் தேர்தலுக்கு அவசியமே இல்லை . சட்ட மன்றங்களின் ஐந்து ஆண்டுக்காலம் முடிந்தபின் ஒரு வருத்தம் கவர்னர் ஆட்சியை அமல் படுத்திவிட்டு நிலைமை சீராகும்போது தேர்தலை நடத்தி இருக்கலாம். மக்களின் பாதுகாப்பைவிட தேர்தல் முக்கியம் இல்லை
Rate this:
Cancel
05-ஏப்-202118:29:06 IST Report Abuse
ஆப்பு மக்களுக்குத்தான் அறிவுரை, வேண்டுகோள் எல்லாம். டில்லிலேருந்து சொகசு விமானத்தில் வந்து மேடையில் கயைத் தூக்கி பரப்புனவங்களுக்கு ஒண்ணும் கிடையாது. மெடல், அவார்டு எல்லாம் வாங்க மட்டும் அவிங்க.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-ஏப்-202113:46:48 IST Report Abuse
தமிழவேல் ஓட்டு போட்டு வெளியே வரும்போது, அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X