அரசியல் செய்தி

தமிழ்நாடு

மோடியை ஆசானாக அதிமுக ஏற்றுக்கொண்டதா?; சிதம்பரம் கேள்வி

Updated : ஏப் 05, 2021 | Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (147)
Share
Advertisement
சென்னை: ஈ.வெ.ரா கொள்கையை ஒழிக்கவே பா.ஜ., தமிழகத்திற்கு வந்திருக்கிறது என்ற பா.ஜ., எம்.பி.,யின் கருத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.பெங்களூரு பா.ஜ., எம்.பி.,யான தேஜஸ்வி சூர்யா. ‛ஈ.வெ.ரா கொள்கையை ஒழிக்கவே பா.ஜ., தமிழகத்திற்கு வந்திருக்கிறது' என பேசியிருந்தார். இது தொடர்பாக ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: தமிழகத்தில் ஈ.வெ.ரா கொள்கையை ஒழிக்கவே பா.ஜ., இங்கு
TamilnaduElections, Modi, Chidambaram, Congress, ADMK,

சென்னை: ஈ.வெ.ரா கொள்கையை ஒழிக்கவே பா.ஜ., தமிழகத்திற்கு வந்திருக்கிறது என்ற பா.ஜ., எம்.பி.,யின் கருத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு பா.ஜ., எம்.பி.,யான தேஜஸ்வி சூர்யா. ‛ஈ.வெ.ரா கொள்கையை ஒழிக்கவே பா.ஜ., தமிழகத்திற்கு வந்திருக்கிறது' என பேசியிருந்தார். இது தொடர்பாக ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: தமிழகத்தில் ஈ.வெ.ரா கொள்கையை ஒழிக்கவே பா.ஜ., இங்கு வந்திருக்கிறது என்று பா.ஜ., எம்.பி., ஒருவர் கூறியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். 'சனாதன தர்மம்' என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர் ஈ.வெ.ரா. தமிழ் நாகரிகத்தையும் தமிழர் தன்மானத்தையும் மீட்டவர் ஈ.வெ.ரா.


latest tamil news


காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமுதாய விடுதலை மற்றும் சமூக நீதியைப் பெற்றுத் தந்தவர்கள் ஈ.வெ.ரா., காமராஜ் மற்றும் அண்ணாதுரை. தான் ஒரு திராவிடக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் அதிமுக பா.ஜ., தலைவரின் பேச்சை ஏன் கண்டிக்கவில்லை? ஈ.வெ.ராவுக்குப் பதிலாக நரேந்திர மோடியைத் தங்கள் தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக முதல்வர் பழனிசாமி - துணை முதல்வர் பன்னீர்செல்வம் கட்சி ஏற்றுக் கொண்டுவிட்டதா?. இவ்வாறு அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (147)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருட்டு திராவிடன் இந்த சொரியானால் ஜாதி ஒளிந்து விட்டதா. கூறுகிட்டவனே இன்னும் ஜாதி துவேசம் அதிகமாக அல்லவா உள்ளது. இந்நேரம் சனாதர்மம் இருந்திருந்தால் இந்த திருட்டு கயவர்கள் கூட்டம் ஒழிக்கப்பட்டிருக்கும்.
Rate this:
Cancel
S Bala - London,யுனைடெட் கிங்டம்
06-ஏப்-202110:03:22 IST Report Abuse
S Bala இத்தாலிய சோனியாவும் அவர் மகனுமே ஆசானாக இருக்க முடியுமானால் ஏன் மோடி இருக்க கூடாது?
Rate this:
Cancel
S Bala - London,யுனைடெட் கிங்டம்
06-ஏப்-202110:03:21 IST Report Abuse
S Bala இத்தாலிய சோனியாவும் அவர் மகனுமே ஆசானாக இருக்க முடியுமானால் ஏன் மோடி இருக்க கூடாது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X