ரூ. 100 கோடி கேட்டு மிரட்டிய சம்பவம்: மஹாராஷ்டிரா அமைச்சர் அனில்தேஷ் முக் ராஜினாமா

Updated : ஏப் 05, 2021 | Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
மும்பை : மாதம் ரூ. 100 கோடி வசூலித்து தர தன்னை மிரட்டியதாக அமைச்சர் அனில் தேஷ் முக் மீது மும்பை போலீஸ் கமிஷனர் கூறிய குற்றம்சாட்டியதையடுத்து இன்று அமைச்சர் அனில் தேஷ் முக் ராஜினாமா செய்தார்.தெற்கு மும்பையில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடியிருப்புக்கு வெளியே வெடிபொருட்களுடன் கார் நின்றிருந்த வழக்கினை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார்
  Dilip Walse Patil, Sharad Pawar Aide, To Be New Maharashtra Home Minister

மும்பை : மாதம் ரூ. 100 கோடி வசூலித்து தர தன்னை மிரட்டியதாக அமைச்சர் அனில் தேஷ் முக் மீது மும்பை போலீஸ் கமிஷனர் கூறிய குற்றம்சாட்டியதையடுத்து இன்று அமைச்சர் அனில் தேஷ் முக் ராஜினாமா செய்தார்.

தெற்கு மும்பையில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடியிருப்புக்கு வெளியே வெடிபொருட்களுடன் கார் நின்றிருந்த வழக்கினை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் விசாரித்து சச்சன் வாஸே என்ற போலீஸ் அதிகாரியை கைது செய்தனர். வழக்கு விசாரணையை தவறாக வழி நடத்தியதாக மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.


latest tamil news



கடந்த மார்ச் 20-ம் தேதி பரம்வீர் சிங் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்குஎழுதிய கடிதத்தில், மும்பையில் உள்ள ஓட்டல்கள், மதுபான விடுதிகள், பப்புகள் உள்ளிட்டவற்றிலிருந்து, மாதம், ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து தர வேண்டும் என உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் என்னை மிரட்டுகிறார் என்றார். இந்த விவகாரம் மஹாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பிய நிலையில், இன்று அனில் தேஷ் முக் தனது பதவியை ராஜினாமா செய்தார். தேசியவாத காங். தலைவர் சரத்பவாரின் உதவியாளரான திலீப் வால்ஸே பாட்டீல், புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
06-ஏப்-202104:36:29 IST Report Abuse
மதுரை விருமாண்டி பாஜாக்காவோட கூட்டணி இருந்த வரைக்கும் சிவசேனாவுக்கு இந்த பிரச்சினை எல்லாம் வரலை.. சுமுகமான வசூல், பங்குன்னு போயிட்டு இருந்தது..
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
06-ஏப்-202108:10:00 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்கூட இருந்து பார்த்த மாதிரி சொல்ற ?...
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் ஒரு மாநிலத்துக்கு ஒருமாதத்துக்கு நூறுகோடின்னா அகண்ட பாரத்தில் எத்தனை மாநிலங்கள் இருக்கு அத்தனைக்கும் மாதா மாதம் நூறுகோடின்னா இருங்க இருங்க இப்பவே தலையை சுத்துதே
Rate this:
Cancel
Charles - Burnaby,கனடா
05-ஏப்-202123:26:53 IST Report Abuse
Charles முன்பிருந்த காங்கிரஸ் / பிஜேபி அரசுகள் விதிவிலக்கல்ல அதனால் தான் அவர்கள் இவ்விஷயத்தில் மௌனமாகிவிட்டார்கள் இது புரியவில்லையா??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X