சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

அவசர புத்தி!

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
அவசர புத்தி!'இனி, அரசியலில் தலையெடுக்க முடியாத அளவுக்கு அவமானப்பட்டு விட்டோமே' என, கவலையில் ஆழ்ந்துள்ளார், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான். இவர், முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன். தன் தந்தை இறந்தபின், அதிரடி அரசியல் செய்ய ஆசைப்பட்டு, பீஹாரில், முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமாரை கடுமையாகவிமர்சித்தார் சிராக். கடந்த

அக்கம் பக்கம்


அவசர புத்தி!



'இனி, அரசியலில் தலையெடுக்க முடியாத அளவுக்கு அவமானப்பட்டு விட்டோமே' என, கவலையில் ஆழ்ந்துள்ளார், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான். இவர், முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன். தன் தந்தை இறந்தபின், அதிரடி அரசியல் செய்ய ஆசைப்பட்டு, பீஹாரில், முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமாரை கடுமையாகவிமர்சித்தார் சிராக். கடந்த நவம்பரில் பீஹாரில் நடந்த சட்டசபை தேர்தலில், தே.ஜ., கூட்டணியிலிருந்து வெளியேறி, ஐக்கிய ஜனதா தளத்துக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தினார். இந்த தேர்தலில், சிராக்கால் பெரிதாக சாதிக்க முடியவில்லை என்றாலும், ஐக்கிய ஜனதா தளத்தின் வெற்றியை பல தொகுதிகளில் சீர்குலைத்தார். பா.ஜ.,வின் உள்ளடி வேலை காரணமாகவே, சிராக், ஐக்கிய ஜனதா தளத்துக்குஎதிராக வேட்பாளர்களை நிறுத்தியதாக, அரசியல் விமர்சகர்கள் கூறினர்.பா.ஜ., வின் பெருந்தன்மையால், நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராகி விட்டார். ஆனால், சிராக்கைத் தான், அரசியல் களத்தில் காண முடியவில்லை. பா.ஜ.,வும், அவரை கை கழுவி விட்டது.
சிராக் கட்சியில் இருந்த ஒரே ஒரு எம்.எல்.ஏ.,வும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும், பா.ஜ.,வுக்கு ஓடத் தயாராகி வருகிறார். 'தந்தை சிரமப்பட்டு கட்டித் காத்த கட்சியை, தன் அவசர புத்தியால் சீர்குலைத்து விட்டாரே' என, சிராக் பஸ்வானைப் பற்றி எரிச்சலுடன் கூறுகின்றனர், அவரது கட்சி தொண்டர்கள்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X