சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழகம் வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து வெற்றி நடை போடுவதை உறுதி செய்ய, தேர்தல் அன்று, அ.தி.மு.க., - பா.ம.க., - பா.ஜ.,வுக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும். அதன் வாயிலாக, தமிழகத்தில் நல்லாட்சி தொடரச் செய்ய வேண்டும்.'டவுட்' தனபாலு: நல்லாட்சியால் கிடைக்கும் தமிழகத்தின் வளர்ச்சி தான், உங்களுக்கு பிரதான நோக்கம் என்பதை, உங்களின் இந்த அறிக்கை, 'டவுட்'

'டவுட்' தனபாலு

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழகம் வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து வெற்றி நடை போடுவதை உறுதி செய்ய, தேர்தல் அன்று, அ.தி.மு.க., - பா.ம.க., - பா.ஜ.,வுக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும். அதன் வாயிலாக, தமிழகத்தில் நல்லாட்சி தொடரச் செய்ய வேண்டும்.

'டவுட்' தனபாலு: நல்லாட்சியால் கிடைக்கும் தமிழகத்தின் வளர்ச்சி தான், உங்களுக்கு பிரதான நோக்கம் என்பதை, உங்களின் இந்த அறிக்கை, 'டவுட்' இன்றி வெளிக்காட்டுகிறது. எனினும், ஜாதிரீதியிலான குறுகிய நோக்கங்களை கைவிட்டு, பரந்துபட்ட வகையில் செயல்பட்டால், பா.ம.க.,வும் ஒருநாள் பேசப்படும் கட்சியாக வளரும் என்பதில், 'டவுட்டே' இல்லை!


தமிழக காங்., தலைவர் அழகிரி:
பிரதமர் மோடி ஆட்சியில், 100 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு, 2020ம் ஆண்டில் மட்டும், 13 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, 3 மடங்கு; அதானியின் சொத்து மதிப்பு, 6 மடங்கு உயர்ந்திருக்கிறது. பிரதமர் மோடியின் ஆட்சி, கார்ப்பரேட் ஆதரவு ஆட்சி என்பதற்கு, இதை விட வேறு என்ன சான்று வேண்டும்.

'டவுட்' தனபாலு: ஒரு வேலையும் செய்யாமல், வெள்ளையும், சொள்ளையுமாக வலம் வரும் அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் சொத்து மதிப்பு எப்படி கிடுகிடுவென உயர்ந்துள்ளது என்பதை, வேட்பு மனு தாக்கலின் போது, அவர்கள் தாக்கல் செய்த சொத்து கணக்கில், மக்கள் அறிந்துள்ளனர். உங்களின் அறிக்கையை படிக்கும் போது, தேர்தல் பிரசாரத்தில், பிசியாக இருந்ததால், நீங்கள் கவனிககவில்லையோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது.


த.மா.கா., தலைவர் வாசன்:
தமிழகத்தில், 10 ஆண்டுகளாக, அ.தி.மு.க., வெற்றிகரமான ஆட்சி நடத்தி வருகிறது. தமிழகம் பல்வேறு துறைகளில் வியக்கத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. எனவே, அ.தி.மு.க., மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்பட வேண்டும்.

'டவுட்' தனபாலு: தமிழகத்தில் நியாயமான அரசியல் தலைவர்கள் குறைந்து வருகின்றனரோ என்ற, 'டவுட்டை' உங்களைப் போன்றவர்களின் செயல்பாடுகளும், அறிக்கைகளும் தான், இல்லை என நிரூபித்து வருகிறது. ஆட்சி, அதிகாரத்திற்காக, தவறான கூட்டணிக்கு செல்லாமல், நியாயமாக செயல்படும் வாசன் போன்றவர்களை, இந்த சமுதாயம் எப்போது தான் புரிந்துகொள்ளப் போகிறதோ!

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
06-ஏப்-202112:17:00 IST Report Abuse
Anantharaman Srinivasan தமிழகத்தில் நியாயமான நேர்மையான அரசியல் தலைவர்கள் குறைந்து வருகின்றனர். சேர்த்து வைத்திருக்கும் சொத்து சுகங்களை காப்பாற்றிக்கொள்ளவே அரசியல் பின்புலம் இவர்களுக்கு தேவைப்படுகிறது.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
06-ஏப்-202106:27:10 IST Report Abuse
D.Ambujavalli உங்கள் கட்சி என்றாலே, ஆளும் கட்சியிடம் பெட்டி, ஸ்வீட் பாக்ஸ் வாங்கிக்கொண்டு, வென்றாலும் தோற்றாலும் அடுத்த தேர்தல் வரை அரசை எதிர்த்து அறிக்கை விடுபவர்கள் என்ற ‘நல்ல பெயர்’ வந்திருக்கிறதே இதோ தோற்ற மகனுக்கு ரா ச,எம் பி வாங்கிக் கொடுத்து விட்டீர்கள் கூட நின்று தோற்றவர்களுக்கு என்ன நல்லது செய்தீர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X