சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
'அது நிறைய பேருக்குப் புரிஞ்சாலும், அவங்க பிழைப்பு நடத்தணுமே... மக்களை அடிமையா வச்சிக்க, இது போல பொய் புரட்டுகளை அவிழ்த்து விட்டா தானே பிழைக்க முடியும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழ்நாடு ஏகாத்துவ ஜமா அத் தலைவர் வேலுார் இப்ராஹிம் பேட்டி: தமிழக சட்டசபை தேர்தலில் முஸ்லிம்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என கூறப்படுவது தவறு. பா.ஜ.,வில், ஜாதி, மதம் பார்ப்பதில்லை,

பேச்சு, பேட்டி, அறிக்கை

'அது நிறைய பேருக்குப் புரிஞ்சாலும், அவங்க பிழைப்பு நடத்தணுமே... மக்களை அடிமையா வச்சிக்க, இது போல பொய் புரட்டுகளை அவிழ்த்து விட்டா தானே பிழைக்க முடியும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழ்நாடு ஏகாத்துவ ஜமா அத் தலைவர் வேலுார் இப்ராஹிம் பேட்டி: தமிழக சட்டசபை தேர்தலில் முஸ்லிம்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என கூறப்படுவது தவறு. பா.ஜ.,வில், ஜாதி, மதம் பார்ப்பதில்லை, கேரளாவில், பா.ஜ.,வில் பல முக்கிய பொறுப்புகளில் முஸ்லிம்கள் உள்ளனர். அதுபோல, தமிழகத்திலும் நிலைமை மாறும்.


'கோவை என்றதும், இனிய மக்கள், அருமையான சீதோஷ்ணம், வாய்க்கு ருசியான சாப்பாடு தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும்; உங்களுக்குத் தான் மாறுபாடாக உள்ளது...' என, சொல்லத் தோன்றும் வகையில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த நடிகர் வையாபுரி பேச்சு:
முருகன் என்றால், வேலும், மயிலும் தான் நினைவுக்கு வரும். அதுபோல, கோவை என்றால், அனைவர் நினைவுக்கு வருவது, கோவையின் கதாநாயகன் அமைச்சர் வேலுமணி தான்.


'பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் மட்டும் போதுமா; சமமாக மதிக்க வேண்டாமா...' என, கேட்கத் துாண்டும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேச்சு:
பெண்களை மதிக்காத கட்சி, தி.மு.க., என, பிரதமர் மோடி பேசியுள்ளார். பெண்களுக்கு, சொத்தில் சம பங்கு உண்டு என அறிவித்தவர், கருணாநிதி தான். உள்ளாட்சிகளில் பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதும், தி.மு.க., தான்.


'தி.மு.க.,வைத் தான், குடும்ப கட்சி என்பர். நீங்கள் சொல்வதுபடி பார்த்தால், பா.ம.க.,வும் அப்படித் தானா...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ம.க., குரு மகள் விருதாம்பிகை பேட்டி:
ராமதாசையும், அன்புமணியையும் கட்சியினர் இனியும் நம்ப வேண்டாம். காடுவெட்டி குரு குடும்பத்துக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களை, அவர்கள் மொத்தமாக அழித்து விடுவர். ராமதாஸ் நடத்துவது பாட்டாளி மக்கள் கட்சி இல்லை; அது, பாசமிகு மகன் கட்சி.



'சரி, நீங்கள் சொல்லுங்க... தேர்தலுக்கு பின், கோவையில் வசிப்பீர்களா...' என, மடக்கத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல் ஹாசன் பேட்டி:
நான் பரமக்குடிவாசியா, சென்னைவாசியா, ராமநாதபுரம்வாசியா, கோவைவாசியா என்பதை, என் வாழ்க்கை தான் முடிவு செய்ய முடியும். இவர்கள் யாரும் முடிவு செய்ய முடியாது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X