பொது செய்தி

தமிழ்நாடு

130 ரூபாய்க்கு விற்கும் குவாட்டர் விலை 500! 'சில்லிங்' விற்பனை படு ஜோரு

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில், போலீசார் ஆசியுடன் 'சில்லிங்' விற்பனை படு ஜோராக நடக்கிறது.'அண்ணா ரெண்டு 'பீர்' கொடுங்க,' என்கிறார் அந்த இளைஞர். அதற்கு 'சில்லிங்' விற்பனையாளர், 'தம்பி இன்னைக்கு 'பீர்' எல்லாம் கிடைக்காது, 'குவாட்டர் தான் இருக்கு, அதுவும் 'எக்ஸ்பிரஸ் பிராண்டு' தான். ஒன்னு, 500 ரூபா, கொடுக்கவா...'

ஆனைமலை:ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில், போலீசார் ஆசியுடன் 'சில்லிங்' விற்பனை படு ஜோராக நடக்கிறது.'அண்ணா ரெண்டு 'பீர்' கொடுங்க,' என்கிறார் அந்த இளைஞர். அதற்கு 'சில்லிங்' விற்பனையாளர், 'தம்பி இன்னைக்கு 'பீர்' எல்லாம் கிடைக்காது, 'குவாட்டர் தான் இருக்கு, அதுவும் 'எக்ஸ்பிரஸ் பிராண்டு' தான். ஒன்னு, 500 ரூபா, கொடுக்கவா...' என்றார்.'என்னனா அநியாயமா இருக்கு, கடை 'லீவு' விட்டதுமே, 130 ரூபா குவாட்டரு, 500 ரூபாயா?' என்றார்.
'தம்பி இன்னைக்கு தான் இந்த 'ரேட்டு', நாளைக்கு இன்னும் அதிகமாகும், கிடைக்கும் போதே வாங்கி வெச்சுக்க. அதுதான், கட்சிக்காரங்க ஓட்டுக்கு, 500, 1000 ரூபா கொடுக்கறாங்களே, அப்பறம் என்ன, வாங்கிட்டு போங்க,' என்றார் அந்த 'சில்லிங்' விற்பனையாளர்.கோட்டூர், ஆனைமலை, ஆழியாறு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதி முழுவதிலும், 'சில்லிங்' விற்பனை செய்த பல இடங்களில், நேற்று, இது போன்ற உரையாடல்களை கேட்க முடிந்தது.சாதாரணமாக டாஸ்மாக் கடை திறக்காத நேரங்களில், குவாட்டர், பீர் மது வகைகளுக்கு, 'சில்லிங்' விற்பனையாளர்கள், 70 ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில், தேர்தலுக்காக நேற்றுமுன்தினம் முதல், இன்று 6ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் விடுமுறை. இதனால், எக்குத்தப்பா விலை வைத்து விற்பனை செய்தனர்.இந்த பெரும் லாபத்தில், ஒரு பகுதி போலீசாருக்கு லஞ்சமாக செல்வதால், போலீசார் எதையும் கண்டும் காணாமல் உள்ளனர்.
'குடி'மகன்கள் புகார் கொடுத்தாலும், செவிமடுக்காமல் இருந்தனர்; கணக்கு காண்பிப்பதற்காக, சொற்ப அளவிலான பாட்டில்களை பறிமுதல் செய்து, சிலர் மீது வழக்கு பதிவு செய்தனர்.தனிப்பிரிவு போலீசாருக்கும் நல்ல 'கவனிப்பு' கிடைப்பதால், போலீசாரை கண்காணிக்க வேண்டிய அவர்களும், 'சில்லிங்' விற்பனை குறித்து, மாவட்ட எஸ்.பி.,க்கு எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. நா.மூ.சுங்கம்., கோட்டூர் தனியார் 'பார்', குமரன்கட்டம் டாஸ்மாக், ஆனைமலை இந்திரா நகர், வேட்டைக்காரன்புதுார் அழுக்குசாமி கோவில் பின்பக்கம் என, டாஸ்மாக் கடைகள், ஒதுக்குப்புறமான பகுதிகள் என, 30க்கும் மேற்பட்ட இடங்களில் போலீஸ் தயவில் 'சில்லிங்' விற்பனை படு ஜோராக நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X