சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஏப்., 6, 1938தஞ்சாவூர் மாவட்டம், இளங்காடு கிராமத்தில், 1938 ஏப்., 6ம் தேதி பிறந்தவர், கோ.நம்மாழ்வார். அண்ணாமலை பல்கலையில், விவசாயத்தில், பி.எஸ்சி., மற்றும் காந்தி கிராமப் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். கோவில்பட்டியில் உள்ள மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்தார். இந்த ஆராய்ச்சி, விவசாயிகளுக்கு உதவாது என்ற எண்ணத்தில், பணியில் இருந்து விலகி,

இதே நாளில் அன்று


ஏப்., 6, 1938



தஞ்சாவூர் மாவட்டம், இளங்காடு கிராமத்தில், 1938 ஏப்., 6ம் தேதி பிறந்தவர், கோ.நம்மாழ்வார். அண்ணாமலை பல்கலையில், விவசாயத்தில், பி.எஸ்சி., மற்றும் காந்தி கிராமப் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். கோவில்பட்டியில் உள்ள மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்தார். இந்த ஆராய்ச்சி, விவசாயிகளுக்கு உதவாது என்ற எண்ணத்தில், பணியில் இருந்து விலகி, 'அய்லாண்ட் ஆப் பீஸ்' என்ற தொண்டு நிறுவனத்தில் இணைந்தார்.இயற்கை விவசாயம் குறித்து, தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இவருக்கு, தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், 'சுற்றுச்சூழல் சுடரொளி' விருதையும்; திண்டுக்கல் காந்தி கிராம கிராமப்புற நிறுவனம், 'டாக்டர்' பட்டமும் வழங்கியது.'இனி விதைகளே பேராயுதம்' உட்பட, ஏராளமான நுால்கள் எழுதியுள்ளார். காலாவதி ஆக்கப்பட்ட மரபு சார்ந்த பல்வேறு தொழில்நுட்பங்களை மீட்டெடுத்துப் புதுப்பித்தார். 2013 டிச., 30ம் தேதி, தன், 75வது வயதில் காலமானார்.நம்மாழ்வார் பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dina - chennai,இந்தியா
06-ஏப்-202110:30:33 IST Report Abuse
dina வாழ்க நம்மாழ்வார் புகழ் வளர்க விவசாயம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X