பாலம் பணி பாதியில் நிறுத்தம்: வாகனம் செல்ல வழியில்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாலம் பணி பாதியில் நிறுத்தம்: வாகனம் செல்ல வழியில்லை

Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (1)
Share
கிணத்துக்கடவு:கோவிந்தாபுரம் ஊராட்சியில், ரோட்டின் நுழைவுவாயிலில் சிறுபாலம் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டதால், வாகனங்கள் செல்வது தடைபட்டுள்ளது.கிணத்துக்கடவு, கோவிந்தாபுரம் ஊராட்சியில் ரோட்டின் இரண்டு பக்கங்களில், கழிவு நீர் வடிகால் கட்டப்பட்டது.இதில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்காக, ரோட்டின் நுழைவுவாயிலில் சிறுபாலம் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டது.
 பாலம் பணி பாதியில் நிறுத்தம்: வாகனம் செல்ல வழியில்லை

கிணத்துக்கடவு:கோவிந்தாபுரம் ஊராட்சியில், ரோட்டின் நுழைவுவாயிலில் சிறுபாலம் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டதால், வாகனங்கள் செல்வது தடைபட்டுள்ளது.கிணத்துக்கடவு, கோவிந்தாபுரம் ஊராட்சியில் ரோட்டின் இரண்டு பக்கங்களில், கழிவு நீர் வடிகால் கட்டப்பட்டது.இதில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்காக, ரோட்டின் நுழைவுவாயிலில் சிறுபாலம் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டது. இதற்கும் கீழ், குடிநீர் குழாய் செல்வதால், அதனை மாற்றம் செய்த பின், சிறுபாலம் அமைக்கப்படவுள்ளது.இதற்காக குழியை மூடாமல் விட்டுள்ளதால், இவ்வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமலும், வாகனங்கள் உள்ளே சென்று வர முடியாமலும் அவதிப்படுகின்றனர்.இப்பணியை முடிக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X