வால்பாறை:வால்பாறை மலைப்பகுதியில், தேர்தல் பணிகள், விறுவிறுப்பாக நடக்கிறது.வால்பாறை தொகுதியில், மலைப்பகுதியில் மட்டும், 56,759 வாக்காளர்கள் உள்ளனர். இதற்காக, 89 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெறும் இன்று காலை, ஓட்டுச்சாவடியிலிருந்து, 200 மீட்டர் துாரத்திற்கு கடைகள் மூடப்பட வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.அதேபோன்று, பதற்றமான வாக்குச்சாவடிகளில், 'வெப்கேமரா' பொருத்தப்பட்டுள்ளன. சக்தி எஸ்டேட், மானாம்பள்ளி எஸ்டேட் உள்ளிட்ட மூன்று ஓட்டுச்சாவடி பகுதியில், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், இந்த வாக்குச்சாவடிகளில் மட்டும் வனத்துறையினர் பாதுகாப்புடன் வாக்காளர்கள் ஓட்டுபோட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வால்பாறையில் உள்ள, 89 வாக்குசாவடிகளுக்கும் பொள்ளாச்சியிலிருந்து நேற்று காலை முதல் ஓட்டுப்பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் லாரியில் கொண்டுவரப்பட்டன.தேர்தல் நடத்தும் அதிகாரி துரைசாமி கூறியதாவது:வால்பாறை தொகுதியில், மொத்தம், 1,176 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மலைப்பகுதியில் மட்டும், ஓட்டுச்சாவடிகளுக்கு நான்கு பேர் வீதம், மொத்தம், 428 பேர் தேர்தல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.வால்பாறை மலைப்பகுதியில் மொத்தம் உள்ள, 89 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஓட்டு போட வரும் வாக்காளர்கள் தவறாமல் 'மாஸ்க்' அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி ஓட்டுப்போட வேண்டும். தேர்தல் அமைதியான முறையில் நடைபெற அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE