பொது செய்தி

தமிழ்நாடு

மரவள்ளி விலை சரிவு: கிலோ ரூ.6க்கு கொள்முதல்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு கிழக்கு மற்றும் மேற்கு பகுதி கிராமங்களில், சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி கிழங்கு குறைந்த விலைக்கு வியாபாரிகள் கேட்பதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில், மரவள்ளி கிழங்கு சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டுள்ளது. இக்கிழங்கு, கேரள மாநிலத்திற்கு அதிகம் தேவைப்படுவதால், வியாபாரிகள் கிலோ
 மரவள்ளி விலை சரிவு: கிலோ ரூ.6க்கு கொள்முதல்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு கிழக்கு மற்றும் மேற்கு பகுதி கிராமங்களில், சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி கிழங்கு குறைந்த விலைக்கு வியாபாரிகள் கேட்பதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில், மரவள்ளி கிழங்கு சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டுள்ளது. இக்கிழங்கு, கேரள மாநிலத்திற்கு அதிகம் தேவைப்படுவதால், வியாபாரிகள் கிலோ ஒன்றுக்கு, 17 முதல், 20 ரூபாய் வரை கொடுத்து, தோட்டங்களில் மொத்த கொள்முதல் செய்து வந்தனர்.இதனால், இப்பகுதி விவசாயிகள் குறைவான செலவில், அதிக லாபம் கிடைக்கும் என்ற நோக்கில், மரவள்ளி கிழங்கு சாகுபடி பரப்பை அதிகரித்தனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கேரள மாநிலத்தில் மரவள்ளி கிழக்கு பயன்பாடு குறைந்துள்ளது.இதனால், வியாபாரிகள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக, 6 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். சேலம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள், மரவள்ளி கிழங்கு பவுடர் தயாரிப்பதற்காக கிலோ ஒன்றுக்கு, 2.50 ரூபாய் விலை நிர்ணயிப்பதால், விவசாயிகள் உற்பத்தி செய்த கிழங்கை விற்பனை செய்தால், நஷ்டம் ஏற்படும், என, விலை உயர்வுக்காக காத்திருக்கின்றனர்.ஆனால், விலை உயர்வு ஏற்படவில்லை. தொடர்ந்து குறைந்த விலைக்கே மரவள்ளி கிழங்கை வியாபாரிகள் கொள்முதல் செய்ய முன்வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X