பஸ்சினுள் ஓட்டை | Dinamalar

பஸ்சினுள் ஓட்டை

Added : ஏப் 05, 2021
Share
குன்னுார்:குன்னுார்- ஊட்டி இடையே இயக்கப்படும் அரசு பஸ்சில், இருக்கையின் அடிபாகம் பெயர்ந்து ஓட்டை விழுந்துள்ளதால், குழந்தைகள் டயரில் சிக்கும் அபாயம் உள்ளது.குன்னுார்- ஊட்டி இடையே இயக்கப்படும் அரசு பஸ்கள் பெரும்பாலும் பழமையானவை. அதில்,'டி.என்.43--0679' என்ற எண் கொண்ட அரசு பஸ்சின், பின் டயர் உள்ள இடத்தில் இருக்கையின் அடிப்பாகம் பெயர்ந்து பெரிய ஓட்டை விழுந்துள்ளது. இதனை
 பஸ்சினுள் ஓட்டை

குன்னுார்:குன்னுார்- ஊட்டி இடையே இயக்கப்படும் அரசு பஸ்சில், இருக்கையின் அடிபாகம் பெயர்ந்து ஓட்டை விழுந்துள்ளதால், குழந்தைகள் டயரில் சிக்கும் அபாயம் உள்ளது.குன்னுார்- ஊட்டி இடையே இயக்கப்படும் அரசு பஸ்கள் பெரும்பாலும் பழமையானவை. அதில்,'டி.என்.43--0679' என்ற எண் கொண்ட அரசு பஸ்சின், பின் டயர் உள்ள இடத்தில் இருக்கையின் அடிப்பாகம் பெயர்ந்து பெரிய ஓட்டை விழுந்துள்ளது. இதனை போக்குவரத்து கழகம் கண்டு கொள்ளவில்லை. இதனை மறைக்க, பெயர் பலகையை கொண்டு மூடியுள்ளனர். இந்த இடத்தில் பஸ்சினுள் அமரும் குழந்தைகள் கீழே விழுந்து டயரில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இதனை ஆய்வு செய்து, சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X