பணம் பட்டுவாடா: மூவர் மீது வழக்கு பதிவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணம் பட்டுவாடா: மூவர் மீது வழக்கு பதிவு

Added : ஏப் 05, 2021
Share
பந்தலுார்:பந்தலுார் அருகே, பணம் பட்டுவாடா செய்த புகாரின் பேரில், மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பந்தலுார் கொளப்பள்ளி அருகே மழவன் சேரம்பாடி பகுதியில், அ.தி.மு.க.,வினர் பணம் பட்டுவாடா செய்வதாக, தேர்தல் நிலை தன்மை ஆய்வு குழுவிற்கு தகவல் கிடைத்தது.அலுவலர் ரகு தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது, அப்பகுதியை சேர்ந்த சிவஞான மூர்த்தி மற்றும் அவரது

பந்தலுார்:பந்தலுார் அருகே, பணம் பட்டுவாடா செய்த புகாரின் பேரில், மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பந்தலுார் கொளப்பள்ளி அருகே மழவன் சேரம்பாடி பகுதியில், அ.தி.மு.க.,வினர் பணம் பட்டுவாடா செய்வதாக, தேர்தல் நிலை தன்மை ஆய்வு குழுவிற்கு தகவல் கிடைத்தது.அலுவலர் ரகு தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது, அப்பகுதியை சேர்ந்த சிவஞான மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்திற்கு, 2000 ரூபாய் பணத்தை கொடுத்து ஓட்டு கேட்டதாக புகார் கூறினார்கள்.இவர்களை பார்த்த, அ.தி.மு.க., நிர்வாகிகள், அகிலேஷ், சிவகுமார், சிவன் ஆகியோர் தப்பி ஓடியுள்ளனர். அப்போது, கீழே விழுந்ததில் இவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் அலுவலரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சேரம்பாடி போலீஸ் நிலையத்தில் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு நடந்து வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X