தொலை துார வாக்காளர்கள் ஓட்டளிக்க அரசு பஸ் ஏற்பாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொலை துார வாக்காளர்கள் ஓட்டளிக்க அரசு பஸ் ஏற்பாடு

Added : ஏப் 05, 2021
Share
ஊட்டி:'நுாறு சதவீதம் ஓட்டு பதிவுக்கு வாக்காளர்கள் சென்று வர, தேவைக்கேற்ப அரசு பஸ்கள் இயக்கப்படும்,' என, கலெக்டர் தெரிவித்தார்.ஊட்டி, குன்னுார், கூடலுார் ஆகிய மூன்று தொகுதிகளில், 5.86 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக, ஓட்டு சாவடி மையம், 868 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் நுாறு சதவீதம் ஓட்டளிக்கும் வகையில், விழிப்புணர்வு

ஊட்டி:'நுாறு சதவீதம் ஓட்டு பதிவுக்கு வாக்காளர்கள் சென்று வர, தேவைக்கேற்ப அரசு பஸ்கள் இயக்கப்படும்,' என, கலெக்டர் தெரிவித்தார்.ஊட்டி, குன்னுார், கூடலுார் ஆகிய மூன்று தொகுதிகளில், 5.86 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக, ஓட்டு சாவடி மையம், 868 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் நுாறு சதவீதம் ஓட்டளிக்கும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பழங்குடியினர் வசிக்கும் தொலைதுார கிராமங்கள், நகர் புறத்தில் ஓட்டு சாவடி மையத்திற்கு செல்ல முடியாமல் உள்ள வயதானவர்கள் சென்று வர மாவட்ட தேர்தல் அலுவலர் மூலம் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தவிர, முதுமலை பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரை போலீஸ்-வனத்துறை மூலம் அழைத்து வந்து ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், '' நுாறு சதவீதம் ஓட்டு பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தொலை துாரத்தில் வசிக்கும் மக்கள் ஓட்டளிக்க வசதியாக தேவைக்கேற்ப அரசு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவறாமல் ஓட்டளிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X