பொது செய்தி

தமிழ்நாடு

இன்று ஒரு விரல் புரட்சி: ஜனநாயக கடமை முக்கியம்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
ஊட்டி:'நீலகிரியில், மூன்று தொகுதியில் உள்ள, 5 லட்சத்து 86 ஆயிரத்து 950 வாக்காளர்கள் தவறாமல் இன்று ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்,' என, மாவட்ட தேர்தல் அலுவலர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.தொகுதி வாரியான விபரம்:* ஊட்டி சட்டசபை தொகுதியில், '98 ஆயிரத்து 690 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 7ஆயிரத்து 186 பெண் வாக்காளர்கள், 6 மூன்றாம் பாலினத்தவர்,' என, மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 882

ஊட்டி:'நீலகிரியில், மூன்று தொகுதியில் உள்ள, 5 லட்சத்து 86 ஆயிரத்து 950 வாக்காளர்கள் தவறாமல் இன்று ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்,' என, மாவட்ட தேர்தல் அலுவலர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.தொகுதி வாரியான விபரம்:* ஊட்டி சட்டசபை தொகுதியில், '98 ஆயிரத்து 690 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 7ஆயிரத்து 186 பெண் வாக்காளர்கள், 6 மூன்றாம் பாலினத்தவர்,' என, மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 882 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். *கூடலுார் (தனி) சட்டசபை தொகுதியில், 92 ஆயிரத்து 366 ஆண் வாக்காளர்கள், 96 ஆயிரத்து 789 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் இல்லை. மொத்தம் 1 லட்சத்து 89 ஆயிரத்து 155 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.*குன்னுார் சட்டசபை தொகுதியில், 91 ஆயிரத்து 567 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 344 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 2,' என, மொத்தம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 913 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.மின்னணு இயந்திரம் விபரம்:'ஊட்டி தொகுதியில், 308; கூடலுார், 280; குன்னுார், 280 ஓட்டுசாவடிகள்,' என, மொத்தம், 868 ஓட்டுசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 1042 'பேலட் யூனிட்'; 1042 'கன்ட்ரோல் யூனிட்'; 1201 'விவி பேட்' என, 3285 மின்னணு இயந்திரங்கள், மூன்று தொகுதிகளுக்கு அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் ஓட்டுசாவடி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், '' ஓட்டு சாவடி மையங்களில், 50 சதவீதம் மையங்கள் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 112 பதற்றமான ஓட்டு சாவடிகளாக கண்டறியப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்காளர்கள் காலை, 7:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடப்பதால், நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவுக்கு ஒத்துழைக்க தவறாமல் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X