பொது செய்தி

இந்தியா

'ரபேல்' விமான ஒப்பந்தத்தில் பணம் கைமாறியதாக தகவல்

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (80)
Share
Advertisement
புதுடில்லி :'ரபேல்' ரக போர் விமானங்களை தயாரிக்கும், பிரான்சை சேர்ந்த, 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த இடைத் தரகர் ஒருவருக்கு, ரூ.4.31 கோடி தந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.2016ம் ஆண்டு பிரான்சிடம் இருந்து நம் விமானப் படைக்கு, 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க, ரூ.59 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.இதில் மோசடி நடந்ததாக, காங்., எம்.பி.,ராகுல், தொடர்ந்து
French, anti-corruption agency, AFA, Dassault, middleman, report

புதுடில்லி :'ரபேல்' ரக போர் விமானங்களை தயாரிக்கும், பிரான்சை சேர்ந்த, 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த இடைத் தரகர் ஒருவருக்கு, ரூ.4.31 கோடி தந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

2016ம் ஆண்டு பிரான்சிடம் இருந்து நம் விமானப் படைக்கு, 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க, ரூ.59 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.இதில் மோசடி நடந்ததாக, காங்., எம்.பி.,ராகுல், தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார்.


latest tamil news
இந்நிலையில், அந்நாட்டின் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின், 2017ம் ஆண்டுக்கான கணக்குகளை ஆய்வு செய்ததில், மொத்தம், 8.62 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு, இந்தியாவைச் சேர்ந்த ஆயுத இடைத் தரகர் சுஷேன் குப்தாவின், 'டெப்சிஸ் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்திற்கு ரூ.4.31 கோடி கொடுத்ததாக கணக்கு காட்டப்பட்டுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த பணம் ரபேல் போர் விமானங்களின் மாதிரிகள், 50ஐ தயாரிக்க, சுஷேன் குப்தா நிறுவனத்துக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், மாதிரிகள் தயாரிக்கப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. ஆனால் பிரான்ஸ் லஞ்ச தடுப்பு பிரிவின் அறிக்கைகளை, பிரான்ஸ் ஊடகங்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
07-ஏப்-202112:38:46 IST Report Abuse
Lawrence Ron மீண்டும் கொஞ்சம் பைலை கானடிக்கவேண்டி வருமோ? ..இல்லே பிலைட்டே காணடிக்கலாமா ..இது காக mp பதவியெல்லாம் கொடுத்து ... வழக்கிலிருந்து காப்பாத்தினோமே
Rate this:
Cancel
06-ஏப்-202113:30:12 IST Report Abuse
ஆரூர் ரங் இன்று ஏப்ரல் 6 .மர்ம மரணமடைந்த வீராணம் ஒப்பந்ததாரர் நினைவு😪 தினம். இ‌ன்று‌ம் அப்போது கொடுக்கபட்ட முன்பணத்துக்கு ஆயிரக்கணக்கான ஓட்டைக் குழாய்கள்😜 நினைவுச்சின்னங்களாக🥺 சாட்சியளிக்கின்றன . மிச்ச ஊழல் நினைவாக கூவம் வாசனை மிகுந்து 🤧மணந்து கொண்டிருக்கிறது. 🗣 அதிலிருந்ததாக (😇😇)சொல்லப்பட்ட முதலையின் வாரிசு சேப்பாக்கம்- திருவல்லிக்கேணியில் நிற்பதாகக் கேள்வி . நாங்கெல்லாம் அப்பவே👍👍 விஞ்ஞான முறை தெரிஞ்சவங்க . எந்த கோர்ட்டாலும் ஒண்ணும்👎 செய்யமுடியாது
Rate this:
06-ஏப்-202117:24:33 IST Report Abuse
ஆப்புஅவிங்கதான் கூறுகெட்டவங்க. அதை உடுங்க. நல்லவங்கன்னு பீத்திக்கிறவங்களைப் பத்தி பேசுங்க ஆரூர்...
Rate this:
06-ஏப்-202117:24:47 IST Report Abuse
ஆப்புஅவிங்கதான் கூறுகெட்டவங்க. அதை உடுங்க. ரொம்ப நல்லவங்கன்னு பீத்திக்கிறவங்களைப் பத்தி பேசுங்க ஆரூர்...
Rate this:
06-ஏப்-202117:24:50 IST Report Abuse
ஆப்புஅவிங்கதான் கூறுகெட்டவங்க. அதை உடுங்க. ரொம்ப நல்லவங்கன்னு பீத்திக்கிறவங்களைப் பத்தி பேசுங்க ஆரூர்...
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
06-ஏப்-202112:53:29 IST Report Abuse
Sridhar கமிஷன் வாங்கின ஆள் மீது ஏற்கனவே அகஸ்டா ஊழல் குற்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜெயிலில் இருந்தவர். கொடுத்தது என்னவோ ராவுல் ஆட்களுக்குத்தான் என்றாலும், இந்த ஜுஜுபி துட்ட ராவுல் வாங்கியிருக்க மாட்டான். ஆனாலும் அரசு இதை தீவிரமாக விசாரித்து குப்தாவுக்கு ஏன் எதுக்காக இந்த பணத்தை கொடுத்தார்கள் என அறிந்து விளக்கம் தரவேண்டும். அவ்வளவு விரிவாக பேசி ஒப்பந்தத்தை முடித்தபின், இவர்களுக்கு தெரியாமல் ஒரு விஷயம் நடந்திருக்கிறது என்றால், அது அவமானம் இல்லையா? ஆகவே, இதை கண்டறிவது அரசின் தலையாய கடமையாகும்.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-ஏப்-202113:45:34 IST Report Abuse
தமிழவேல் நேத்தியே (4/4/21) கோர்டுமுலமா அங்கேயே அதை மூடியாச்சு.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X