சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

மாலை நேர பயிலகம் நடத்துகிறோம்!

Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மாலை நேர பயிலகம் நடத்துகிறோம்! பெங்களூரில் உள்ள, ஐ.டி., நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக இருந்தவர், கண்ணன். மனைவி நித்யா, பல் மருத்துவர். பொள்ளாச்சி அருகே, கிராமப்புற மாணவர்களுக்கு மாலை நேர பயிலகம் நடத்தி வருவது பற்றி கூறுகின்றனர்: நாங்கள், கோவையை சொந்த ஊராகக் கொண்டவர்கள். காந்திய சிந்தனைகளில் ஈர்ப்புக் கொண்டவர்கள். பொள்ளாச்சி அருகே சேர்வகாரன்பாளையம்
 மாலை நேர பயிலகம் நடத்துகிறோம்!


மாலை நேர பயிலகம் நடத்துகிறோம்!



பெங்களூரில் உள்ள, ஐ.டி., நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக இருந்தவர், கண்ணன். மனைவி நித்யா, பல் மருத்துவர். பொள்ளாச்சி அருகே, கிராமப்புற மாணவர்களுக்கு மாலை நேர பயிலகம் நடத்தி வருவது பற்றி கூறுகின்றனர்: நாங்கள், கோவையை சொந்த ஊராகக் கொண்டவர்கள். காந்திய சிந்தனைகளில் ஈர்ப்புக் கொண்டவர்கள். பொள்ளாச்சி அருகே சேர்வகாரன்பாளையம் கிராமத்தில் வசிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்காக, மாலை நேர பயிலகம் நடத்தி வருகிறோம்.கடந்த, 2005-ல் எங்களுக்கு திருமணமானது. அதன் பிறகு வேலை நிமித்தமாக சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வசிக்க வேண்டியிருந்தது. அந்த பரபரப்பான வாழ்க்கை சூழல் மீது இருவருக்குமே சலிப்பு ஏற்பட்டது. எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி தான், மஹாத்மா காந்தியிடம் கொண்டு சேர்த்தது. நுகர்வுக்கு நம்மை அடிமையாக்கும் நகரச் சூழலிலிருந்து வெளியேற வேண்டும் என்கிற எண்ணம் எங்கள் இருவருக்கும் ஏற்பட்டது.இங்கு மாலை நேர பயிலகம் துவங்கியபோது, 15 -- 20 மாணவர்கள் இணைந்தனர். முதலில் அவர்களுக்கு என்ன தேவையோ அதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதன் பிறகு தான் மற்றவை எல்லாம் எனத் தீர்மானித்தோம். இப்பகுதி மக்களைப் பொறுத்தவரை இது ஒரு டியூஷன். எனவே, முதலில் பள்ளி பாடங்களை கற்றுக் கொடுத்தோம். அதுபோக எஞ்சியிருக்கும் நேரங்களில், மற்ற செயல்பாடுகள் நோக்கி அவர்களை கொண்டு சென்றோம்; சிறு நுாலகம் அமைத்தோம்; விளையாடுவதற்கான பொருட்கள் கொடுத்தோம்; திரைப்படங்கள் போட்டுக் காண்பித்தோம்.பல்வேறு துறை சார்ந்து இயங்கும் நண்பர்கள் வருகின்றனர். நாடகப் பயிற்சி, சதுரங்கம், பறவைகளை அறிதல் எனப் பலவற்றையும் சொல்லிக் கொடுக்கின்றனர். எங்கள் மகள் மகிழ்மலர், பயிலகக் குழந்தைகளுக்கு இசை கற்றுக் கொடுக்கிறாள்.இச்செயல்பாட்டின் அவசியத்தை புரிந்து கொண்ட இப்பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவர் பயிலகம் நடத்த இடம் கொடுத்துள்ளார்.ஐ.டி., நிறுவன துணைத் தலைவர் பணியிலிருந்து கண்ணன் வெளியேறியதும், திருக்குறளை அடிப்படையாக வைத்து பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு தலைமைப் பண்பை கற்றுக் கொடுக்கும் வகையில், 'சீர் ஏழு' என்ற நிறுவனத்தை துவங்கினோம்.இதன் மூலம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களிடையே திருக்குறளை மேலும் விளக்கப்பூர்வமாகக் கொண்டு சேர்த்துள்ளோம்.சீர் ஏழு நிறுவனத்தை, 2012-ல் துவங்கினோம். சென்னை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்தோம். இதற்கு பெரிய வரவேற்பு இருந்தது எனச் சொல்ல முடியாது. இருந்தும் சிறிய தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது!

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nagendirank - Letlhakane,போஸ்ட்வானா
06-ஏப்-202113:05:52 IST Report Abuse
nagendirank வாழ்க தங்களின் மகத்தான பணி
Rate this:
Cancel
Govind - Delhi,இந்தியா
06-ஏப்-202107:57:21 IST Report Abuse
Govind சமூக பற்றும் தமிழ் பற்றுள்ள இந்த தம்பதியை பார்க்கும்போது நம்பிக்கை ஏற்படுகிறது ... இவர்கள் இணைய தளம் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் பணம் படைத்தோரிடம் நன்கொடை பெற்று அதை ஏழைகளுக்கு கொண்டு சேர்க்கலாம். இதுவேய எனது கோரிக்கை. அவர்களுடையய மகளின் பெயர் "மகிழ் மலர்" மற்றும் 'சீர் ஏழு' என்கிற பெயரில் நிறுவனம்.. இப்படிப்பட்ட தமிழ் பெயர்களை வைப்பவர்கள் தான் தமிழை வாழவைப்பவர்கள் .. ஏன் மகளுக்கு நான் தமிழ் பெயர் வைத்ததும் எல்லோரும் என்னை பாராட்டினர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X