பதவி விலகினார் அமைச்சர் தேஷ்முக் :உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆபத்து

Updated : ஏப் 07, 2021 | Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
மும்பை :மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது, மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, 15 நாட்களுக்குள், சி.பி.ஐ., ஆரம்பகட்ட விசாரணை நடத்த, மும்பை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து, உள்துறை அமைச்சர் பதவியை, தேசியவாத காங்.,கை சேர்ந்த அனில் தேஷ்முக் ராஜினாமா செய்தார். குற்றச்சாட்டுகள்
மஹாராஷ்டிரா, உத்தவ் தாக்கரே அரசு,ஆபத்து! பதவி விலகினார் அமைச்சர் தேஷ்முக்

மும்பை :மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது, மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, 15 நாட்களுக்குள், சி.பி.ஐ., ஆரம்பகட்ட விசாரணை நடத்த, மும்பை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதையடுத்து, உள்துறை அமைச்சர் பதவியை, தேசியவாத காங்.,கை சேர்ந்த அனில் தேஷ்முக் ராஜினாமா செய்தார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு கவிழ வாய்ப்புகள் இருப்பதாக, எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இம்மாநில தலைநகரான மும்பையில், 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' அதிபர் முகேஷ் அம்பானியின், 'அன்டிலா' என்ற பிரமாண்ட பங்களா உள்ளது. இதன் அருகே, வெடிகுண்டு நிரப்பப்பட்ட, 'ஸ்கார்பியோ' கார், சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.


அபூர்வமானதுமும்பை குற்றப்பிரிவில் உதவி இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சச்சின் வாஸே, இந்த காரை, அம்பானியின் வீட்டருகே நிறுத்திச் செல்லும் காட்சி, கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.இந்த காரின் உரிமையாளரான மன்சுக் ஹிரன், தானே மாவட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த இரு வழக்குகளையும், மும்பை போலீசார் சரிவர விசாரிக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மும்பை போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங்கை பணி இடமாற்றம் செய்து, மாநில உள்துறை அமைச்சரும், தேசியவாத காங்., மூத்த தலைவருமான அனில் தேஷ்முக் உத்தரவிட்டார்.இந்த வழக்கு விசாரணை யில், மாநில உள்துறை அமைச்சரின் தலையீடு இருப்பதாகவும், மும்பையில் உள்ள ஓட்டல்கள், மதுபான விடுதிகளில் இருந்து, மாதம், 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து தரும்படி, அனில் தேஷ்முக், போலீஸ் அதிகாரிகளை நிர்ப்பந்திப்பதாகவும், பரம்வீர் சிங், முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் பகிரங்க புகார் அளித்தார்.
'அமைச்சர் மீதான புகாரை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்' எனக் கோரி, முன்னாள் கமிஷனர் பரம்வீர் சிங், வழக்கறிஞர் ஜெய்ஸ்ரீ பாட்டீல் உட்பட, பல்வேறு தரப்பினர், மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர்.தலைமை நீதிபதி தீபன்கர் தத்தா தலைமையிலான அமர்வு, அனைத்து மனுக்களையும் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:இந்த வழக்கு அசாதாரணமானது மட்டுமல்லாமல், அபூர்வமானதும் கூட. எனவே சுதந்திரமான விசாரணை தேவை.
உரிமை இல்லைஇந்த வழக்கை, உயர்மட்ட கமிட்டி விசாரிக்க, மாநில அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இதை கருத்தில் வைத்து, இந்த வழக்கில், 15 நாட்களுக்குள், சி.பி.ஐ., அதிகாரிகள் ஆரம்பகட்ட விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.சி.பி.ஐ., உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 15 நாட்கள் ஆரம்பகட்ட விசாரணையை முடித்த பின், அடுத்த கட்ட நகர்வு குறித்து, அதிகாரிகள் முடிவெடுக்கலாம். இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.
வழக்கு, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம், உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், ராஜினாமா கடிதத்தை நேற்று வழங்கினார்.அதில், 'வழக்கு விசாரணை, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்ட பின், அமைச்சர் பொறுப்பில் தொடர எனக்கு தார்மீக உரிமை இல்லை. எனவே, அமைச்சர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்கிறேன்' என, அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதையடுத்து, மஹாராஷ்டிரா அமைச்சரவையில், தொழிலாளர் நலத்துறை மற்றும் கலால் துறை அமைச்சராக பதவி வகித்து வந்த, தேசியவாத காங்.,கை சேர்ந்த திலிப் வல்சே பாட்டீல், உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வகித்து வந்த தொழிலாளர் நலத்துறை, தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிப் வசம், ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜினாமா குறித்து, மஹாராஷ்டிரா மாநில, பா.ஜ., தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியதாவது:அனில் தேஷ்முக் ராஜினாமா செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவில்லை எனில், ஜனநாயகம் வலுவிழக்கும். சி.பி.ஐ., யின் ஆரம்ப கட்ட விசாரணை முடிவடைந்த பின், பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவரும்.இவ்வாறு அவர் கூறினார்.நீதிமன்ற உத்தரவு, மஹாராஷ்டிராவின், 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணி அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்திஉள்ளது.சி.பி.ஐ., விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அது கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தி, ஆட்சி கவிழவும் வழிவகுக்கும் வாய்ப்பு உள்ள தாக, பா.ஜ.,தலைவர்கள் கருதுகின்றனர்.
ஆட்சி செய்ய அதிகாரமில்லை!உத்தவ் தாக்கரே தலைமையிலான மஹாராஷ்டிரா அரசில், பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. தற்போது, உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, மாநிலத்தை ஆட்சி செய்வதற்கான தார்மீக அதிகாரத்தை, உத்தவ் தாக்கரே இழந்துவிட்டார்.ரவிசங்கர் பிரசாத், மத்திய சட்ட அமைச்சர், பா.ஜ.,


இருசக்கர வாகனம் பறிமுதல்!முகேஷ் அம்பானி பங்களா அருகே, வெடிகுண்டு கார் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, மும்பையின் மிரா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த வீட்டில் வசித்து வரும் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இவர், கைது செய்யப்பட்டுள்ள உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாஸேவின் நெருங்கிய கூட்டாளி என்பது விசாரணையில் தெரிய வந்தது. அந்த பெண்ணின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள, விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை, அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Godfather_Senior - Mumbai,இந்தியா
06-ஏப்-202116:01:37 IST Report Abuse
Godfather_Senior மஹா வினாஸ் அகாடி அரசு நீக்கப்பட வேண்டும்
Rate this:
Cancel
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
06-ஏப்-202113:23:07 IST Report Abuse
Amirthalingam Shanmugam இறைவனின் தேசத்தில் சொர்ணாக்கா வழக்கு என்னாச்சு?
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
06-ஏப்-202111:00:12 IST Report Abuse
Loganathan Kuttuva தமிழகத்தில் உள்துறை அமைச்சகம் முதல் அமைச்சரிடம் தான் இருக்கும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X