அரசியல் செய்தி

தமிழ்நாடு

தவறாமல் ஓட்டளியுங்கள் வாசகர்களே!

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. நம்மை ஆள்பவரை தேர்ந்தெடுக்கும் கவுரவம், 6.28 கோடி வாக்காளர்களாகிய, ஹீரோக்களுக்கு கிடைத்துள்ளது. ஓட்டுச் சாவடிகளில், கையுறை மற்றும் கிருமி நாசினியுடன், உங்களை வரவேற்க, தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. இன்று(ஏப்.,6) நடக்கும் சட்டசபை தேர்தலுக்கு, பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மறக்காமல் முக
TN election, Tamilnadu Elections 2021, TN Assembly election, vote, voters

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. நம்மை ஆள்பவரை தேர்ந்தெடுக்கும் கவுரவம், 6.28 கோடி வாக்காளர்களாகிய, ஹீரோக்களுக்கு கிடைத்துள்ளது. ஓட்டுச் சாவடிகளில், கையுறை மற்றும் கிருமி நாசினியுடன், உங்களை வரவேற்க, தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. இன்று(ஏப்.,6) நடக்கும் சட்டசபை தேர்தலுக்கு, பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மறக்காமல் முக கவசம் அணிந்து, ஓட்டு போட்டு, ஜனநாயகக் கடமையாற்றுங்கள் வாசகர்களே!

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தல், இன்று நடக்க உள்ளது. காலை, 7:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நடக்கும். தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், அறிகுறி உள்ளவர்கள், உடல் வெப்பநிலை சராசரிக்கு மேல் இருப்போர், மாலை, 6:00ல் இருந்து, இரவு, 7:00 மணிக்குள் ஓட்டளிக்க, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கவுரவம்


அப்போது, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அனைவரும், கொரோனா பாதுகாப்பு கவச உடை அணிந்திருப்பர். ஓட்டு போட வருவோருக்கும், கவச உடை வழங்கப்படும். தமிழகத்தில், 3.09 கோடி ஆண்கள்; 3.19 கோடி பெண்கள்; 7,192 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 6.28 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஹீரோக்களுக்கு, ஆள்பவரை தேர்ந்தெடுக்கும் கவுரவம் கிடைத்துள்ளது. அவர்கள் ஓட்டளிப்பதற்கு வசதியாக, மாநிலம் முழுதும், 88 ஆயிரத்து, 937 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அவர்கள் ஓட்டளிக்க வரும் போது, கைகளை சுத்தம் செய்ய, கிருமி நாசினி; ஓட்டுப்பதிவு செய்யும் கைக்கு, கையுறை வழங்கப்பட உள்ளது. எனவே, நம் வாசகர்கள் அனைவரும், முக கவசம் அணிந்து, ஓட்டுச்சாவடிக்கு சென்று தவறாமல் ஓட்டளிக்க வேண்டும்.


'வெப்கேமரா'


ஓட்டுப்பதிவு ஏற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது: ஓட்டுப்பதிவுக்கு, 1.29 லட்சம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம்; 99 ஆயிரத்து, 180 கட்டுப்பாட்டு இயந்திரம்; 91 ஆயிரத்து, 180, வி.வி.பி.ஏ.டி., இயந்திரங்கள் தயாராக உள்ளன. தேர்தல் பணியில், 4.17 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். துணை ராணுவ வீரர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர் என, மொத்தம், 1.58 லட்சம் பேர், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, 46 ஆயிரத்து, 203 ஓட்டுச்சாவடிகளில், 'வெப் கேமரா'க்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மிகவும் பதற்றமான ஓட்டுச்சாவடிகள், 537; பதற்றமான ஓட்டுச்சாவடிகள், 10 ஆயிரத்து, 813 கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஓட்டுச் சாவடிகளில், ஓட்டுப்பதிவை கண்காணிக்க, 8,014 'மைக்ரோ' பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பார்வைத் திறன் இல்லாத மாற்றுத் திறனாளிகள், 3,538 பேருக்கு, 'பிரெய்லி' எழுத்துகளுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், பிரெய்லி எழுத்துகளுடன் கூடிய வாக்காளர் உறுதிச் சீட்டு, 60 ஆயிரத்து, 884 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க விண்ணப்பித்த அனைவருக்கும், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்காக, 'PWD' என்ற, 'மொபைல் ஆப்' உருவாக்கப்பட்டு உள்ளது. அதன் வழியே, ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்கச் செல்ல, நகரும் நாற்காலி தேவை என்றால், முன்பதிவு செய்யலாம்.

மேலும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின், 'tnelections.gov.in' என்ற இணையதளத்தில், ஓட்டுச்சாவடியில், எத்தனை பேர் ஓட்டளிக்க காத்திருக்கின்றனர் என்பதை அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு தொகுதியிலும், ஒரு ஓட்டுச்சாவடியை பெண்களுக்காகவும், நான்கை மாதிரி ஓட்டுச்சாவடிகளாகவும் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளிலும், இன்று திட்டமிட்டபடி ஓட்டுப்பதிவு நடைபெறும். சில தொகுதிகளில் தேர்தல் ரத்து என்பதில் உண்மையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


'பூத் சிலிப்' தேவையில்லை!


தேர்தல் ஆணையம் சார்பில், வாக்காளர்களுக்கு, 'பூத் சிலிப்' எனப்படும், வாக்காளர் உறுதிச் சீட்டு, வீடுதோறும் வினியோகம் செய்யப்பட்டது.ஆனால், பெரும்பாலான இடங்களில், பூத் சிலிப் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது:நேற்று காலை வரை, 95 சதவீத பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது; மற்றவர்களுக்கும், இரவுக்குள் வழங்கப்படும்.

பூத் சிலிப் இல்லையென்றாலும், ஓட்டளிக்கலாம். பூத் சிலிப் சரியாக வரவில்லை என, சென்னையில் புகார் வந்தது. அதை சரிபார்க்கும்படி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. வாக்காளர்கள், தாங்கள் எந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க வேண்டும் என்ற விபரத்தை அறிய, '1950' என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது 'NVSP' என்ற இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம். அதேபோல், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி, ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் உட்பட, 11 ஆவணங்களில், ஏதேனும் ஒன்றை காண்பித்து ஓட்டளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


பணத்துக்கு தடையில்லை!


தமிழகத்தில், பணப் பட்டுவாடாவை தடுக்க, பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இன்று, ஓட்டுப்பதிவு முடிந்த பின், அவை கலைக்கப்படும். நாளை முதல், பணம் எடுத்துச் செல்ல உச்ச வரம்பு கிடையாது. ஆனால், ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்


latest tamil newsகேரளா, அசாமிலும் தேர்தல்!


கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 140 இடங்கள் உள்ள சட்டசபைக்கு, இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. மாநிலத்தில், 2.74 கோடி வாக்காளர்கள், ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில், 957 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். ஆளும் இடது ஜனநாயக முன்னணி, காங்., தலைமையிலான கூட்டணி மற்றும் பா.ஜ., ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

அசாமில், முதல்வர் சர்பானந்த சோனாவால் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 126 இடங்கள் உள்ள சட்டசபைக்கு, மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது.இரண்டு கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது. 40 தொகுதிகளில் இன்று நடக்கும் தேர்தலில், 337 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இங்கு, ஆளும் பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு இடைய கடும் போட்டி நிலவுகிறது.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 294 இடங்கள் உள்ள சட்டசபைக்கு, எட்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இன்று மூன்றாம் கட்டமாக, 30 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இதில், 78.5 லட்சம் வாக்காளர்கள், ஓட்டளிக்க தகுதியுடையோராகஉள்ளனர். 205 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆளும் திரிணமுல், எதிர்க்கட்சியான, பா.ஜ., மற்றும் இடதுசாரி - காங்., கூட்டணி ஆகிய கட்சிகளுக்கு இடையே, இங்கு மும்முனை போட்டி உள்ளது.


latest tamil news

'ஒரு நாள் அல்ல; 5 ஆண்டு குத்தகை!'


நாளை என்பது ஒரே ஒரு நாள் அல்ல... ஐந்தாண்டு கால குத்தகை. பொத்தானில் குத்துகையில் கவனம் கொள்வோம். ஆறு என்பது நாட்டின் வளம்; இரு கரைகளையும் உடைத்து, வரையின்றி பாய்ச்சி, எல்லாரும் எல்லாமும் பெற, உரியதைத் தேர்ந்தெடுப்போம். ஏப்., 1ஐ, 6க்கு ஒத்தி வைக்காமல், 'ஆறு'தல் பிச்சைக்கு கை நீட்டாமல், நல்லாட்சிக்கு விரல் நீட்டுவோம் கிங்மேக்கராக...!
- நடிகர் பார்த்திபன்


latest tamil news'உரிமையை விட்டுத்தராதீர்!'


ஒவ்வொரு ஓட்டும் நம் உரிமை; அதை நாம் விட்டுத் தரக்கூடாது. நாம் ஒருத்தர் ஓட்டு போட்டாலும், போடவிட்டாலும் என்ன பெரிய மாற்றம் வந்து விடப்போகிறது என, நினைக்கக்கூடாது. அது, ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய தீங்கு. ஒவ்வொரு ஆளுமை தலைமையை தேர்ந்தெடுப்பது விரல் மை; அதுதான் ஜனநாயகத்தின் வலிமை. அதை நாம், எப்போதும் விட்டுத் தரக்கூடாது. எல்லாரும் ஓட்டுச்சாவடிக்கு சென்று, ஓட்டை பதிவு செய்ய வேண்டும்.
- நடிகர் விவேக்.


'சந்ததிகள் நலம் பெற சிந்தியுங்கள்!'


இன்று தேர்தல்... ஓட்டுப் போடுவது உங்கள் கடமை... நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் போடலாம். யார் பேச்சிற்கும், யாரோட அனுதாபியாகவும் இருந்து சிந்திக்க வேண்டாம். இது உங்களுக்கான உரிமை; உங்கள் வாழ்வில், எதிர்காலத்தில் எது தேவையோ; நம் சந்ததிகளின் வாழ்க்கை நலம் பெற, எது சமூக மாற்றமாக வேண்டுமோ... சிந்தியுங்கள்.
- நடிகர் சேரன்

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL - tirumalai,இந்தியா
06-ஏப்-202116:35:13 IST Report Abuse
SENTHIL தேர்தல் ஆணையத்துக்கும் அதன் அனைத்து பணியாளர்களுக்கும் ஒரு மிகப்பெரிய சல்யூட். மிக சிறப்பான ஏற்பாடுகள்.... நமக்கு இன்று விதைக்கும் நாள். அரசியல்வாதிகளுக்கோ இன்று அறுவடை நாள்.... எது எப்படியோ மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை நடந்தால் நல்லது இறைவா... ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
06-ஏப்-202116:30:28 IST Report Abuse
Endrum Indian கிருமி நாசினியுடன் வரவேற்கின்றது தேர்தல் ஆணையம் அப்போ கிருமிகள் எல்லாம் நாசம் தான் இந்த தேர்தலில்
Rate this:
Cancel
SENTHIL - tirumalai,இந்தியா
06-ஏப்-202115:21:47 IST Report Abuse
SENTHIL தேர்தல் ஆணையத்துக்கும் அதன் அணைத்து பணியாளர்களுக்கும் ஒரு மிகப்பெரிய சல்யூட். மிக சிறப்பான ஏற்பாடுகள்.... நமக்கு இன்று விதைக்கும் நாள். அரசியல்வாதிகளுக்கு இன்று அறுவடை நாள்.... எது எப்படியோ மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை நடந்தால் நல்லது இறைவா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X