பொது செய்தி

தமிழ்நாடு

7 மாவட்டங்களில் வேகமெடுக்குது கொரோனா: நாளை முதல் கட்டுப்பாடு

Updated : ஏப் 07, 2021 | Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (11+ 28)
Share
Advertisement
சென்னை :''கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், நாளை முதல் பொதுமக்கள் ஒத்துழைப்புடன், தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்,'' என, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில், மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு குளிர்பதன நிலையத்தை, நேற்று ஆய்வு செய்த அவர் அளித்த பேட்டி:தேர்தல் பாதுகாப்பாக நடக்க, தேர்தல் கமிஷனுடன், சுகாதாரத்
Covid19, Corona Virus, TN districts, Tamil Nadu, மாவட்டங்கள், கொரோனா, வேகம், கட்டுப்பாடு

சென்னை :''கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், நாளை முதல் பொதுமக்கள் ஒத்துழைப்புடன், தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்,'' என, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில், மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு குளிர்பதன நிலையத்தை, நேற்று ஆய்வு செய்த அவர் அளித்த பேட்டி:தேர்தல் பாதுகாப்பாக நடக்க, தேர்தல் கமிஷனுடன், சுகாதாரத் துறையும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஓட்டுச்சாவடிக்கு அனைவரும் முக கவசம் அணிந்து வர வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு, முக கவசம், கையுறை, கிருமிநாசினி உள்ளிட்ட, பல பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

ஓட்டுச்சாவடிகளில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருவதால், சமூக இடைவெளியுடன் மக்கள் ஓட்டளிக்க வேண்டும். தமிழகத்திற்கு இதுவரை, 54 லட்சம், 'டோஸ்' தடுப்பூசிகள் வந்துள்ளன. வீடு, வீடாக சென்று காய்ச்சல் இருக்கிறதா என, பரிசோதிக்கும் முறை, நாளை முதல் தீவிரப்படுத்தப்படும்.

சென்னையில் உள்ள பிரதான அரசு மருத்துவமனைகளில், 4,365 படுக்கைகள் உள்ளன. இதில், 1,269 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் செயல்பட துவங்கி உள்ளன.தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு தொற்று வரலாம்; ஆனால், தீவிர தொற்றாக இருப்பதில்லை. எனவே, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசியை மக்கள் அலட்சியப்படுத்துவது வருத்தம் அளிக்கிறது.

பொது மக்கள் ஒத்துழைப்போடு, நாளை முதல் தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அத்தியாவசியமில்லாத பணிகளுக்கு அனுமதிவழங்கப்படாது. தொற்று அதிகமாக இருக்கும் பகுதிகளில், கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும். மக்கள் பதற்றமடைய வேண்டாம். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்ட, 925 பகுதிகளில், தன்னார்வலர்கள் பணி அமர்த்தப்பட்டு, அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முழு ஊரடங்கு என்ற வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம்.

நோய் பரவல் அதிகரித்து வருவதை மக்கள் புரிந்து, தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். ஏழு மாவட்டங்களில், தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறோம். மற்ற மாவட்டங்களில் தொற்று குறைவாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின் போது, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் உடனிருந்தார்.


தியேட்டர்களுக்கு மீண்டும் கிடுக்கி


கொரோனா பரவலை தடுக்க, தமிழகத்தில் தியேட்டர்களுக்கு மீண்டும், 50 சதவீதஇருக்கை முறை கொண்டு வரப்பட உள்ளது.

கொரோனாவின், 2வது அலை, தமிழகத்தில் அதிகரித்து வரும் வேளையில், ஓட்டுப்பதிவு முடிந்ததும், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. ஏற்கனவே, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தற்போது தியேட்டர்களில், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே, அனுமதி வழங்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவலை தடுக்க, கர்நாடகாவில் உள்ள தியேட்டர்களில், 50 சதவீத இருக்கை முறை கொண்டு வரப்பட்டு விட்டது.

தமிழகத்தில், ஜனவரியில் தான், தியேட்டர்களுக்கு, 100 சதவீத இருக்கைக்கு அனுமதி தரப்பட்டது. மாஸ்டர் தவிர, ஒன்றிரண்டு படங்கள் மட்டுமேலாபத்தை பார்த்த நிலையில், வரும், 9ம் தேதி, தனுஷ் நடித்த, கர்ணன் படம் வெளியாகிறது. சில தினங்களுக்கு முன், கார்த்தி நடித்த, சுல்தான் வெளியானது.

Advertisement
வாசகர் கருத்து (11+ 28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
06-ஏப்-202123:20:37 IST Report Abuse
Mani . V அட எழவெடுத்தவங்களா, தேர்தல் பரப்புரைகளின் போது ஆட்டு (நான் அந்த "மலையை" சொல்லவில்லை) மந்தை போன்று கூட அனுமதித்து விட்டு, இனி அழித்தொழிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டீர்களே. உங்களுக்கு என்னய்யா மக்களின் வரிப்பணத்தில் மஞ்சள் குளிக்கலாம். பாவம் மக்கள். "இருந்தா பூமிக்கு இல்லையென்றால் சாமிக்கு" ஊ........ ஊ.........
Rate this:
Cancel
sathyam - Delhi,இந்தியா
06-ஏப்-202119:37:28 IST Report Abuse
sathyam கும்பல் கும்பலாய் தேர்தல் பரப்புரை , கூட்டம் கூடும் போது வராத வைரஸ் இப்போதான் வருமா ? ...
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
06-ஏப்-202117:28:26 IST Report Abuse
Malick Raja சினிமா கொட்டகையே திறந்தது தவறு.. அதை கட்டுப்படுத்தாதது அதனினும் தவறு ..பேருந்தில் மக்களை அளவில்லாமல் அனுமதித்தது தவறு .. பேருந்து நிலையங்களில் தனிமனித இடைவெளி கண்காணிக்காமல் தவறியதும் தவறு .. ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தக்கூடிய (disposable) முக கவசம் கொடுக்க்காமல் இருந்ததும் தவறு .அதை கண்காணித்து அறிவு வழங்க விளங்காமல் இருந்ததும் தவறு .தேர்தல் அறிவித்து அதை முறைப்படுத்த முடியாமல் தேர்தல் நடத்தியதும் தவறு .. தவறு என்பதை விளங்காமல் இருக்கும் ஆளுமைகள் இனியாவது இந்திய அதிகாரிகளின் சுதந்திரமான நடவடிக்கைகளை மேற்கொன்று அதை கண்காணிக்கலாம் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X