பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நோயாளிகள் ஓட்டளிக்க '108 ஆம்புலன்சை அழைக்கலாம்'

Updated : ஏப் 07, 2021 | Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை :'கொரோனா நோயாளிகள் ஓட்டுச்சாவடிக்கு செல்ல, '108 ஆம்புலன்ஸ்' சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்' என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இதில், 80 வயதுக்கும் மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள், கொரோனா நோயாளிகளுக்கு தபால் ஓட்டு வழங்கப்பட்டது.தபால் ஓட்டு அளிக்க முடியாதோர், நேரடியாக ஓட்டுச்சாவடிகளில் ஓட்டளிக்கலாம்.
கொரோனா நோயாளிகள், ஓட்டு, 108 ஆம்புலன்ஸ்

சென்னை :'கொரோனா நோயாளிகள் ஓட்டுச்சாவடிக்கு செல்ல, '108 ஆம்புலன்ஸ்' சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்' என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இதில், 80 வயதுக்கும் மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள், கொரோனா நோயாளிகளுக்கு தபால் ஓட்டு வழங்கப்பட்டது.தபால் ஓட்டு அளிக்க முடியாதோர், நேரடியாக ஓட்டுச்சாவடிகளில் ஓட்டளிக்கலாம்.

இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தீவிர கொரோனா தொற்றுடன், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் ஓட்டளிக்க அனுமதியில்லை. உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பின், டாக்டரின் பரிந்துரைப்படி ஓட்டளிக்கலாம். தொற்று பாதிப்பால் தனிமையில் உள்ளோர், எவ்வித பரிந்துரையுமின்றி ஓட்டளிக்கலாம்.

அவ்வாறு ஓட்டளிக்க விரும்புவோர், 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொண்டு, தங்கள் முகவரி, ஓட்டுச்சாவடி முகவரியை தெரிவிக்க வேண்டும்.அவர்களுக்கு மாலை, 6:00 முதல், 7:00 மணி வரை ஓட்டளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நேரத்திற்கு முன், வீட்டில் இருந்தே, அவர்களுக்கு முழு உடற்கவசம் வழங்கப்பட்டு, உரிய பாதுகாப்புடன் ஓட்டுச்சாவடிக்கு அழைத்து செல்லப்படுவர். அவர்களுக்கு, விரலில் மை வைக்கப்பட மாட்டாது. காத்திருப்பு இல்லாமல், ஓட்டளித்து வீடு திரும்பலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,பஹ்ரைன்
06-ஏப்-202110:34:40 IST Report Abuse
sahayadhas election முடுஞ்சவுடன ஜனங்கள வெளிய வரக்கூடாதுனு நாளை முதல் அடி . என்ன உங்க நியாயம்.
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
06-ஏப்-202110:22:28 IST Report Abuse
sahayadhas அத்தியாச வேலைக்கு வெளி வந்த சாதாரண ஜனங்களை அடித்த அரசு . இப்போது அவனுங்க பொளபுக்கு நோயாளியை உலவ விடுகிறது. என்னடா பூமி இது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X