எடியூரப்பா மீதான ஊழல் வழக்கு நிறுத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்

Updated : ஏப் 05, 2021 | Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி : அரசு நிலத்தை சட்ட விரோதமாக தனியாருக்கு விற்பனை செய்த வழக்கில், கர்நாடகா முதல்வர் எடியூரப்பா மீதான விசாரணையை நிறுத்தி வைத்து, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. குற்றச்சாட்டுகர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில தலைநகரான பெங்களூருவில் தொழில் பூங்கா அமைப்பதற்காக, கர்நாடகா தொழில் மேம்பாட்டு வாரியம், 2006ல்
எடியூரப்பா மீதான ஊழல் வழக்கு நிறுத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி : அரசு நிலத்தை சட்ட விரோதமாக தனியாருக்கு விற்பனை செய்த வழக்கில், கர்நாடகா முதல்வர் எடியூரப்பா மீதான விசாரணையை நிறுத்தி வைத்து, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.


குற்றச்சாட்டு



கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில தலைநகரான பெங்களூருவில் தொழில் பூங்கா அமைப்பதற்காக, கர்நாடகா தொழில் மேம்பாட்டு வாரியம், 2006ல் நிலங்களை கையகப்படுத்தியது.


latest tamil news




கடந்த, 2008 - 11 காலகட்டத்தில், கர்நாடகா முதல்வராக பதவி வகித்த போது, இதில், 24 ஏக்கர் நிலத்தை, சில தனி நபர்களுக்கு விற்பனை செய்வதற்காக, எடியூரப்பா விடுவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த விவகாரத்தில், முதல்வர் எடியூரப்பா உட்பட, ஒன்பது பேர் மீது, லோக் ஆயுக்தா போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில், குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால், எடியூரப்பா உட்பட, ஒன்பது பேர் மீதான வழக்கை, லோக் ஆயுக்தா நீதிமன்றம், 2016ல் கைவிட்டது.

இது தொடர்பாக, ஆலம் பாஷா என்பவர், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த, 2012ல் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், வழக்கு விசாரணையை தொடர, சிறப்பு நீதிமன்றத்துக்கு சமீபத்தில் உத்தரவிட்டது.



மனு தாக்கல்



இந்த உத்தரவை எதிர்த்து, எடியூரப்பா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naresh Giridhar - Chennai,இந்தியா
06-ஏப்-202112:06:02 IST Report Abuse
Naresh Giridhar அருமை. சாத்தியமேவ ஜெயதே
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
06-ஏப்-202110:15:03 IST Report Abuse
pattikkaattaan எங்கப்பா தேசபக்தர்கள் ஒருவரைக்கூட காணவில்லை .. ? .. ஓ அவர்களெல்லாம் சுடலையை திட்டுவதில் பிசியாக உள்ளனரா ?.. நாமளும் சொல்லி வைப்போம் .. திமுக ஒழிக ..
Rate this:
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
06-ஏப்-202113:10:19 IST Report Abuse
Nallavan Nallavanஏன், நீங்க தேசபக்தர் இல்லீங்களா ???? எடியூரப்பா கஜகர்ணம் போட்டாலும் கருணாநிதியை விஞ்ச முடியாது ........... அதில் நமக்கெல்லாம் பெருமைதானே ????...
Rate this:
Naresh Giridhar - Chennai,இந்தியா
06-ஏப்-202117:54:01 IST Report Abuse
Naresh Giridharகழுதையும் குட்டிச் சுவரூம் ....
Rate this:
Cancel
Raman - kottambatti,இந்தியா
06-ஏப்-202107:00:39 IST Report Abuse
Raman பாவம் ஏடி டாடி மேலிடத்துக்கு கப்பம் கட்டணும் என்ன செய்வார் காசு வசூலிச்சு கொடுத்தவனும் இல்லாட்டி ஜெயில்ல இல்லை தூங்கணும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X