எங்கள் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிட வேண்டாம்: சீனா எச்சரிக்கை| Dinamalar

எங்கள் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிட வேண்டாம்: சீனா எச்சரிக்கை

Updated : ஏப் 05, 2021 | Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (14)
Share
பெய்ஜிங்: சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் பல ஆண்டுகளாக தொடர்ந்து மோதல் போக்கு நீடித்த வண்ணம் உள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ தற்போது அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஆசிய பிரதேசத்தில் தொடர்ந்து அண்டை நாடுகளுடன் சீனா மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்கா இந்த விவகாரத்தில் அடிக்கடி தலையிடுவது சீனாவுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.

பெய்ஜிங்: சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் பல ஆண்டுகளாக தொடர்ந்து மோதல் போக்கு நீடித்த வண்ணம் உள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ தற்போது அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.



latest tamil news



ஆசிய பிரதேசத்தில் தொடர்ந்து அண்டை நாடுகளுடன் சீனா மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்கா இந்த விவகாரத்தில் அடிக்கடி தலையிடுவது சீனாவுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ இதுகுறித்து கூறுகையில் பேச்சுவார்த்தைக்கு சீனா தயாராகத்தான் உள்ளது. ஆனால் அது அனைத்து நாடுகளும் ஏற்கும் வகையில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும்


தங்களை உலகின் மிகப்பெரிய நாடு என்று கூறும் எந்த நாட்டின் கருத்தையும் சீனா ஏற்றுக்கொள்ளாது. மேலும் உலக விவகாரங்களில் அமெரிக்கா அதிகமாக தலையிடுகிறது. சீனாவின் அண்டை நாடுகளுடனான உறவில் அமெரிக்கா இதேபோல மீண்டும் மீண்டும் தலையிட்டால் அதனை சீனா தைரியமாக எதிர்கொள்ளும் என அவர் கூறியுள்ளார். பொய்யான கருத்துக்கள் மூலமாக சீனாவுக்கு பொருளாதாரத் தடை விதிப்பதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.


latest tamil news



மேலும் சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது கூடாது எனத் தெரிவித்துள்ளார். சமீபத்திய ஹாங்காங் மற்றும் தைவான் பிரச்னைகள், ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இஸ்லாமிய பழங்குடி இன மக்கள் விவகாரம் உள்ளிட்டவற்றில் அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இனி இதுபோன்ற விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக்கூடாது என்று வாங் இ தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X