அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின், உதயநிதி தொகுதிகளில் தேர்தலை நிறுத்த அ.தி.மு.க., மனு

Updated : ஏப் 07, 2021 | Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை : 'ஸ்டாலின் போட்டியிடும், கொளத்துார் தொகுதி உட்பட, ஐந்து சட்டசபை தொகுதிகளில், தேர்தலை நிறுத்த வேண்டும்' என, அ.தி.மு.க., சார்பில், தேர்தல் கமிஷனில் மனு அளிக்கப்பட்டுள்ளது.தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலர் துரைமுருகன், இளைஞர் அணி செயலர் உதயநிதி, முதன்மை செயலர் நேரு, திருவண்ணாமலை மாவட்ட செயலர் வேலு ஆகியோர் முறையே, கொளத்துார், காட்பாடி, சேப்பாக்கம் -
DMK, MK Stalin, Udhayanidhi, ADMK, Stalin,Udhayanidhi Stalin, ஸ்டாலின், உதயநிதி

சென்னை : 'ஸ்டாலின் போட்டியிடும், கொளத்துார் தொகுதி உட்பட, ஐந்து சட்டசபை தொகுதிகளில், தேர்தலை நிறுத்த வேண்டும்' என, அ.தி.மு.க., சார்பில், தேர்தல் கமிஷனில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலர் துரைமுருகன், இளைஞர் அணி செயலர் உதயநிதி, முதன்மை செயலர் நேரு, திருவண்ணாமலை மாவட்ட செயலர் வேலு ஆகியோர் முறையே, கொளத்துார், காட்பாடி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, திருச்சி மேற்கு, திருவண்ணாமலை தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.


பணப் பட்டுவாடா


'இத்தொகுதிகளில், வாக்காளர்களுக்கு, 'ஆன்லைன்' வழியாகவும், நேரடியாகவும், பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. கொளத்துார் தொகுதியில், ஸ்டாலின் மனைவி துர்கா, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளார். 'எனவே, இத்தொகுதிகளில், தேர்தலை நிறுத்த வேண்டும்' என, தனித்தனியே, அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல், புகார் மனு அளித்து உள்ளார்.

இதுகுறித்து, அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி:வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, ஓட்டு வாங்கும் கலாசாரத்தை, திருமங்கலத்தில், தி.மு.க., அறிமுகப்படுத்தியது. அந்த பார்முலாவை, ஒவ்வொரு தேர்தலிலும் கடைபிடிக்கிறது. பணநாயகத்தின் வழியே வெற்றி பெற, தி.மு.க., நினைக்கிறது. தேர்தல் கமிஷன், நியாயமாகவும், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொளத்துார், சேப்பாக்கம், காட்பாடி, திருவண்ணாமலை, திருச்சி மேற்கு ஆகிய, ஐந்து தொகுதிகளில், பெருமளவில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க., வினர் நவீன முறையை கையாள்வதில், தேர்ச்சி பெற்றவர்கள். விஞ்ஞான ரீதியாக, ஊழல் செய்வதில் கை தேர்ந்தவர்கள். அவர்கள், வாக்காளர் மொபைல் போன் எண் பெற்று, 'கூகுல் பே' வழியாக, பணம் வழங்கி உள்ளனர்.கொளத்துார் தொகுதியில், ஸ்டாலின் மனைவி துர்கா, மகளிர் சுய உதவி குழுக்களை அழைத்து, குழுவுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளார். ஐந்து தொகுதிகளில், அதிக பணம் கொடுத்து, செயற்கையாக வெற்றி பெற முயற்சிக்கின்றனர்.


பகல் கனவு


எனவே, ஐந்து தொகுதிகளில், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி, தேர்தல் கமிஷனில், புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன், விருப்பு வெறுப்பின்றி செயல்பட வேண்டும். தி.மு.க.,வினர் பணத்தை வைத்து, ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றனர்: அது நடக்காது. வெறும் பகல் கனவாக முடியும். தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு, போலீஸ் நிலையம் சென்று பணம் கொடுத்துள்ளார். இது குறித்தும் புகார் அளித்துள்ளோம். இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-ஏப்-202100:04:02 IST Report Abuse
Pugazh V அதிமுக அமைச்சர் பத்து கோடி ரூபாயை ரெண்டு வண்டிகளில் கொடுத்து விட்டு, அதை உடன் இருந்த.அதிமுக செயலர் மாட்டு ரவி அவனது ஆட்களை வைத்து தூக்க முயல, அதில் நடந்த அடிநடியில் எழனோ பறக்கும் படையை ஆழைக்க வண்டி.பணம் எல்லாத்தையும் விட்டு விட்டு அதிமுக கும்பல் மற்றும் பணம் அனுப்பிய அமைச்சரின் கும்பல் தெறித்து ஓட சுமார் 6கோடி மற்றும் ரெண்டு வண்டிகள் பறிமுதல். ஹலோஶ்ரீ.ஜெயக்குமார் மற்றும் பாஜக அதிமுக அன்பர்கள்.. எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
06-ஏப்-202121:10:17 IST Report Abuse
Elango தேர்தலை நிறுத்தினால் அவர்கள் ஆட்சியில் இடைத்தேர்தல் நடக்கும்.... ஆதிமுக டெபாசிட் கூட வாங்காது...
Rate this:
sankar - Nellai,இந்தியா
08-ஏப்-202110:30:18 IST Report Abuse
sankarஅவர்கள் - எவர்கள் - அது கனவிலும் நடக்காது...
Rate this:
Cancel
DMK வுக்கு வெற்றிக்கொடி கட்டு - முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்,இந்தியா
06-ஏப்-202112:02:38 IST Report Abuse
 DMK வுக்கு  வெற்றிக்கொடி கட்டு இதை சொல்லும்போது நேற்று கொமாரு மூஞ்சியில் ஒரு மகிழ்ச்சியே காணோம் , எப்பவும் சிரித்த முகத்துடன் தேவை இல்லாம முந்தி கொண்டு பதில் சொல்ரவன் அடங்கி பொய் விட்டான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X