கால் அழுகிய நிலையில் மனநோயாளி; கவனிப்பாரின்றி பரிதாப நிலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கால் அழுகிய நிலையில் மனநோயாளி; கவனிப்பாரின்றி பரிதாப நிலை

Added : ஏப் 05, 2021
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் பஸ்ஸ்டாப் அருகே மன நோயாளி ஒருவர் கால் அழுகிய நிலையில் கவனிப்பாரின்றி பரிதாப நிலையில் வாழ்கிறார்.ராமநாதபுரம் கேணிக்கரை பஸ்ஸ்டாப் அருகே மன நோயாளி ஒருவர் வலது கால் புண்பட்டு அழுகிய நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இப்பகுதியில் ரோட்டோரம் இருக்கிறார். காலில் ஈக்கள் மொய்த்த நிலையில் பல நேரங்களில்

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் பஸ்ஸ்டாப் அருகே மன நோயாளி ஒருவர் கால் அழுகிய நிலையில் கவனிப்பாரின்றி பரிதாப நிலையில் வாழ்கிறார்.

ராமநாதபுரம் கேணிக்கரை பஸ்ஸ்டாப் அருகே மன நோயாளி ஒருவர் வலது கால் புண்பட்டு அழுகிய நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இப்பகுதியில் ரோட்டோரம் இருக்கிறார். காலில் ஈக்கள் மொய்த்த நிலையில் பல நேரங்களில் ஆடைகளின்றி பரிதாபமாக கிடக்கிறார்.இவரை மருத்துவமனையில் சேர்க்கவோ, உதவி செய்வதற்கோ யாரும் முன்வரவில்லை.

இதுகுறித்து ராமநாதபுரம் ஞானதீப சங்கத்தின் சமூக ஆர்வலரான எம்.முனீஸ்வரன் 44, கூறுகையில், தங்கள் அமைப்பு சார்பில் இவர் உட்பட ஏராளமான மன நோயாளிகள், ஆதரவின்றி ரோட்டோரம் திரிபவர்களுக்கு காலை, இரவு உணவு வழங்குகிறோம். இந்த நோயாளியின் கால்கள் அழுகிய நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க இரக்க சிந்தனை படைத்தவர்களும், அதிகாரிகளும் உதவி செய்ய வேண்டும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X