பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடி தொகுதியில் 182 இடத்தில் வெப் கேமரா

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி தொகுதிக்குட்பட்ட பகுதியில் 357 ஓட்டுச்சாவடி மையங்களில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பரமக்குடி தொகுதியில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 590 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 48 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 16 பேர் என மொத்தம், 2 லட்சத்து 55 ஆயிரத்து 654 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை

பரமக்குடி : பரமக்குடி தொகுதிக்குட்பட்ட பகுதியில் 357 ஓட்டுச்சாவடி மையங்களில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பரமக்குடி தொகுதியில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 590 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 48 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 16 பேர் என மொத்தம், 2 லட்சத்து 55 ஆயிரத்து 654 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை காட்டிலும் 2,458 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

பரமக்குடியில் தொகுதியில் கொரோனா அச்சத்தை தவிர்க்கும் வகையில் 302 முதல்நிலை ஓட்டுச்சாவடி மையங்களுடன், 55 மையங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இவற்றில்32 பதட்டமான ஓட்டுச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளதுடன், மொத்தம் 182 இடங்களில் வெப் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கண்காணிக்கப்படுகிறது.இதன்படி அனைத்து மையங்களிலும் தேர்தல் அலுவலர்கள், போலீசார் உள்ளிட்டோர் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்று தயார் நிலையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X