ஆனந்துார் தரைப்பாலம் ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் பாதிப்பு

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம் : திருச்சி -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை மேல்பனையூர் விலக்கில்இருந்து கூடலுார், நத்தக்கோட்டை, ஆய்ங்குடி வழியாக ஆனந்தூர் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது.இந்த ரோட்டால் 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் ஜனவரி மாதத்தில் பெய்த தொடர்மழையால், கோட்டக்கரை ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு ஆனந்துார் ரோட்டில், ஆய்ங்குடி அருகே

ஆர்.எஸ்.மங்கலம் : திருச்சி -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை மேல்பனையூர் விலக்கில்இருந்து கூடலுார், நத்தக்கோட்டை, ஆய்ங்குடி வழியாக ஆனந்தூர் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது.

இந்த ரோட்டால் 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் ஜனவரி மாதத்தில் பெய்த தொடர்மழையால், கோட்டக்கரை ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு ஆனந்துார் ரோட்டில், ஆய்ங்குடி அருகே உள்ள தரை பாலத்தின் வழியாக உபரி நீர் அதிகளவில் வெளியேறியது.

பல நாட்களாக இந்த தரைப் பாலம் வழியாக தண்ணீர் வெளியேறியதால், தரைப்பாலம் சேதமடைந்து, ஜல்லி கற்கள் பெயர்ந்து ரோட்டோரம் முழுவதும் ரோடு சேதம்அடைந்துள்ளது. இதனால் அவ்வழியாக இரவில் செல்லும் வாகன ஓட்டிகள்சிரமம் அடைந்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X