ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறி உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை மொத்தம் ரூ.2 கோடியே 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் விதிமீறல்களை தடுக்க பறக்கும்படைகுழு, நிலைத்த கண்காணிப்பு குழுவினர் என மொத்தம் 72 குழுக்கள் பணிபுரிகின்றனர். மாவட்ட எல்லைகள், தேர்தல் பிரசார பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்படுகிறது.கடைசிநேர பணப்பட்டுவாடாவை தடுக்க சோதனைச்சாவடிகளில் அரசு பஸ்கள், பால்வண்டி, சரக்குவாகனங்கள், இருசக்கரவாகனங்கள் உள்ளிட்டவைகளில் நிறுத்தி நிலைத்த கண்காணிப்பு குழு, பறக்கும்படையினர் சோதனையிடுகின்றனர்.
24 மணிநேர ரோந்து பணியில் உள்ளனர். ஏப்.,4 வரை மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்ததாக பரமக்குடி- ரூ.46,34, 194, திருவாடனை- ரூ. 44,70,650, ராமநாதபுரம்- ரூ.93,34,490, முதுகுளத்துார்- ரூ.35,67,275 என மொத்தம் ரூ.2 கோடியை 20 லட்சத்து 06 ஆயிரத்து 609 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE