பூத் சிலிப் கட்டாயம் இல்லை; பிற ஆவணம் மூலம் ஓட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பூத் சிலிப் கட்டாயம் இல்லை; பிற ஆவணம் மூலம் ஓட்டு

Added : ஏப் 05, 2021
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் இதுவரை பூத் சிலிப் கிடைக்காத நபர்கள் அதற்கு பதிலாக தேர்தல் ஆணையம் தெரிவித்துஉள்ள புகைப்படத்துடன் கூடிய 11 வகையான ஆவணங்களை பயன்படுத்தி ஓட்டளிக்கலாம்.புகைப்படத்துடன் கூடிய ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, வங்கி, அஞ்சலக

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் இதுவரை பூத் சிலிப் கிடைக்காத நபர்கள் அதற்கு பதிலாக தேர்தல் ஆணையம் தெரிவித்துஉள்ள புகைப்படத்துடன் கூடிய 11 வகையான ஆவணங்களை பயன்படுத்தி ஓட்டளிக்கலாம்.

புகைப்படத்துடன் கூடிய ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகம், பான்கார்டு, பாஸ்போர்ட், ஒய்வூதிய ஆவணம், தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொதுநிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி அடையாள அட்டை, லோக்சபா, சட்டசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை ஓட்டளிக்க பயன்படுத்தலாம் என தேர்தல் அதிகாரிகள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X