திருவாடானை : எஸ்.பி.பட்டினம் அருகே துணை மின்நிலையம் திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் ஆறு ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் கவலையடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் அருகே புல்லக்கடம்பன் ஊராட்சி சோழகன்பேட்டை கிராமத்தில் துணை மின்நிலையம் அமைக்கப்பதற்கான முயற்சி இரு ஆண்டுகளுக்கு முன் துவங்கியது.
இதற்காக அரசு புறம்போக்கு இடத்தை மின் வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்ததால் அதை அகற்றி இடத்தை கையகப்படுத்தி தர வேண்டும் என்று வருவாய்த்துறையினரிடம் மின்வாரிய அதிகாரிகள் வலியுறுத்தினர்.இரு ஆண்டுகள் ஆகியும் ஆக்கிரமிப்பை அகற்றும் பணிகள் நடைபெறவில்லை. இதனால் அத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இங்கு துணை மின்நிலையம் அமையும் பட்சத்தில் புல்லக்கடம்பன், எஸ்.பி.பட்டினம், கலியநகரி, ஓரியூர், சிறுகம்பையூர், பனஞ்சாயல் உள்ள ஆறு ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் பயன் பெறுவார்கள்.
இது குறித்து புல்லக்கடம்பன் ஊராட்சி தலைவர் மாதவி கூறியதாவது:அடிக்கடி மின்தடை, குறைந்த அழுத்த மின்சாரத்தால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். மேலும் தற்போது 35கி.மீ. துாரத்தில் உள்ள தொண்டி துணை மின்நிலையத்திற்கு மின் கட்டணம் செலுத்துவது, புதிய இணைப்புபெறுவதுஉள்ளிட்ட பல்வேறு வேலையாக செல்ல வேண்டியதுள்ளது.இங்கு துணை மின்நிலையம் அமையும் பட்சத்தில் கிராம மக்களின் பயணம் மற்றும் செலவு குறையும். ஆகவே அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்ட இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
இதுகுறித்து மின்வாரிய அலுவலர்கள் கூறியதாவது:துணை மின்நிலையம்அமைய இருக்கும் இடத்தை உயர் அதிகாரிகள்சில மாதங்களுக்கு முன் பார்வையிட்டனர்.நிலத்தை கையகப்படுத்துவது குறித்து வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். இடம் மின்வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டவுடன் துணை மின்நிலையம் அமைக்கும் பணிகள் துவங்கும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE