போலீஸ் பாதுகாப்புடன் இயந்திரங்கள் அனுப்பி வைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் பாதுகாப்புடன் இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

Added : ஏப் 05, 2021
Share
ராமநாதபுரம் : இன்று (ஏப்.,6) சட்ட சபை தேர்தலை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓட்டுச்சாவடி மையங்களுக்கு மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் ராமநாதபுரம், முதுகுளத்துார், பரமக்குடி, திருவாடானை ஆகிய தொகுதிகளில் மொத்தம் 1369 பாகங்களில் ஆண்- 5,76,343, பெண்- 5,81,132, இதரர் 65 என மொத்தம் 11,57,540 வாக்காளர்கள் உள்ளனர்.1647

ராமநாதபுரம் : இன்று (ஏப்.,6) சட்ட சபை தேர்தலை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓட்டுச்சாவடி மையங்களுக்கு மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ராமநாதபுரம், முதுகுளத்துார், பரமக்குடி, திருவாடானை ஆகிய தொகுதிகளில் மொத்தம் 1369 பாகங்களில் ஆண்- 5,76,343, பெண்- 5,81,132, இதரர் 65 என மொத்தம் 11,57,540 வாக்காளர்கள் உள்ளனர்.1647 ஓட்டுச்சாவடி மையங்களில் பணிபுரிய 7905 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுஉள்ளனர். இதனையடுத்து நேற்று அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களுக்கு மின்னணு ஓட்டு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன், தேர்தலுக்குரிய பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதுபோக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தெர்மல் ஸ்கேனர், கையுறை, சானிடைசர், முககவசம் அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளது. வாக்குச்சாவடியில் அலுவலர்கள் இரவு தங்குகின்றனர். இன்று (ஏப்.,6) அதிகாலை 5:30மணிக்குமேல் வேட்பாளர் அல்லதுஅவர்கள் முகவர்கள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடக்கிறது. காலை சரியாக 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேர்தல் அதிகாரிகள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X