ராமநாதபுரம் : இன்று (ஏப்.,6 ) சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவின் போது கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத நபர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியுள்ளார்.
கலெக்டர் கூறியதாவது: ஓட்டுப்பதிவின்போது கொரோனா தடுப்பு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். அலுவலர்கள், போலீசார், முகவர்கள், வாக்காளர்கள் ஓட்டுச்சாவடி மையத்திற்குள் நுழையும் முன்பு அங்குள்ள கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம்செய்ய வேண்டும். 6 அடி இடைவெளி விட்டு வரிசையில் நின்று, வெப்பநிலையை அறிய சுகாதார பணியாளர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்
.கையுறையை வலது கையில் கட்டாயம் அணிந்து, ஒருவர் பின் ஒருவராக உள்ளே செல்ல வேண்டும். ஓட்டளித்த பின் கையுறைகளை ஒதுக்கியுள்ள மருத்துவ கழிவுகளை சேகரிக்கும் தொட்டியில் போட வேண்டும். கொரோனா பாதித்தவர்கள், அறிகுறி உள்ளவர்கள் ஒதுக்கப்பட்டுள்ள மாலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை ஓட்டளிக்கலாம்.
சுகாதார ஊழியர்கள் மூலம் கண்காணிக்கப்படும், கடைசி ஒரு மணிநேரத்தில் தேர்தல்அலுவலர்கள், போலீசார் முழு கவச உடையை அணிந்திட வேண்டும்.விதிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மீது பொது சுகாதார சட்டம் 1939ன் அபராதம் விதித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' எனக் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE