பொது செய்தி

தமிழ்நாடு

தொடரும் வாக்காளர் அட்டை 'குளறுபடி'

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
திருப்புத்துார் : திருப்புத்துார் தொகுதியில் வாக்காளரின் அடையாள அட்டையில் ஒரு முகவரியும், வாக்காளர்பட்டியலில் வேறு முகவரியும் உள்ளது. திருப்புத்துார் நகரைச் சேர்ந்த ஒருவர் கடந்த ஆண்டு தொகுதியில் உள்ள எஸ்.வி.மங்கலத்திற்கு தனது மற்றும் மனைவி ஓட்டுக்களை மாற்றினார். அதற்கான வாக்காளர் அடையாள அட்டையும் அவருக்கு வழங்கப்பட்டு விட்டது. இந்நிலையில் தற்போதைய தேர்தலுக்கு

திருப்புத்துார் : திருப்புத்துார் தொகுதியில் வாக்காளரின் அடையாள அட்டையில் ஒரு முகவரியும், வாக்காளர்பட்டியலில் வேறு முகவரியும் உள்ளது.

திருப்புத்துார் நகரைச் சேர்ந்த ஒருவர் கடந்த ஆண்டு தொகுதியில் உள்ள எஸ்.வி.மங்கலத்திற்கு தனது மற்றும் மனைவி ஓட்டுக்களை மாற்றினார். அதற்கான வாக்காளர் அடையாள அட்டையும் அவருக்கு வழங்கப்பட்டு விட்டது. இந்நிலையில் தற்போதைய தேர்தலுக்கு அவருக்கு எஸ்.வி.மங்கலத்தில் பூத் சிலிப் வழங்கப்படவில்லை. அவரிடமிருந்த வாக்காளர் அடையாள அட்டை எண் மூலம் 'ஆன் லைன்'ல் பதிவிட்டு பார்த்த போது அவரது ஓட்டு திருப்புத்துார் நகரிலேயே நீக்கப்படாமல் இருப்பது தெரிந்தது.

மாற்றப்பட்டதாக வேறு முகவரியிட்ட அடையாள அட்டை விநியோகித்த பின்னும் வாக்காளர் பட்டியலில் பழைய முகவரியில் ஓட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதைக் கண்டு பிடிக்க அவருக்கு இரண்டு நாட்களாகி விட்டது. இதுபோல பலருக்கும் குளறுபடியான நிலை ஏற்பட்டுள்ளது. 'பூத் சிலிப்' களும் முழுமையாக விநியோகிக்கப்படாததால் பலருக்கும் இது தெரியவில்லை.

இது குறித்து தேர்தல் பிரிவினர் , மீண்டும் வாக்காளர் சரி பார்க்கும் போது அவர் புதிய முகவரியில் இல்லாமல் இருந்ததால் நீக்கப்பட்டிருக்கலாம். பழைய முகவரியில் நீக்கப்படாமல் தொடர்ந்திருக்கலாம். வசிப்பது ஒரு முகவரி. வாக்காளராக பதிவு செய்தது வேறு முகவரியாக இருப்பவர்களுக்கு இந்த குளறுபடி ஏற்பட்டிருக்கலாம். முகவரி மாறி பலரும் வசிப்பதாலேயே 'பூத் சிலிப்' கள் வழங்குவதும்முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை.

இருப்பினும் தேர்தல் நாளன்றும்விடுபட்டவர்களுக்கு அந்தந்த ஓட்டுச்சாவடியில் சம்பந்தப்பட்ட பி.எல்.ஓ.க்கள் இருந்து 'பூத் சிலிப்'கள் வழங்குவார்கள். என்றனர். வாக்காளர் அட்டையில் ஆதார் இணைக்கும் வரை இந்த குளறுபடி தொடரவே செய்யும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X