சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் ரூ.70 லட்சத்தில் மேற்கூரை அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணியை கான்ட்ராக்டர் சுந்தரபாண்டியன் எடுத்துள்ளார். இங்கு நடக்கும் பணிகளை நகராட்சி மேற்பார்வையாளர் உலகநாதன் அவ்வப்போது பார்வையிடுகிறார். ஏப்.,4 அன்று இரவு 10:00 மணிக்கு பணிகளை பார்வையிட சென்றவரை கான்ட்ராக்டர், அவரது உதவியாளர் சந்திரன் உட்பட 6 பேர் மேற்பார்வையாளரை தாக்கி, அவரை பணி செய்யவிடாமல் மிரட்டியுள்ளனர். காயமுற்ற மேற்பார்வையாளரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் விசாரித்து வருகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE