தமிழ்நாடு

மாவட்டத்தில் பதட்டமான ஓட்டுச்சாவடிகள் 257...! கண்காணிப்பில் துணை ராணுவப்படையினர்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
சாத்துார், : விருதுநகர் மாவட்டத்தில் 257 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் ஆயுதம் தாங்கிய துணை ராணுவப்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சாத்துார், திருச்சுழி உள்ளிட்ட ஏழு சட்டசபை தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 8 லட்சத்து 13 ஆயிரத்து 542, பெண்

சாத்துார், : விருதுநகர் மாவட்டத்தில் 257 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் ஆயுதம் தாங்கிய துணை ராணுவப்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சாத்துார், திருச்சுழி உள்ளிட்ட ஏழு சட்டசபை தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 8 லட்சத்து 13 ஆயிரத்து 542, பெண் வாக்காளர்கள் 8 லட்சத்து 57 ஆயிரத்து 262, இதர வாக்காளர்கள் 192 என 16 லட்சத்து 70 ஆயிரத்து 996 பேர் உள்ளனர். இத்தொகுதிகளில் 149 பேர் போட்டியிடுகின்றனர்.

இன்று நடக்கும் தேர்தலை யொட்டி 2370 ஓட்டுச்சாவடிகளில் 1245 வெப் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 257 தேர்தல் நுண் பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியிலும், 9,480 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர், சிவகாசி, சாத்துார், அருப்புக்கோட்டை, திருச்சுழி தொகுதிகளில் 16 பேருக்கு மேல் வேட்பாளர்கள் போட்டியிடுவதால் இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கும் நிலையில், ஓட்டளிக்க வருவோர் உடல் வெப்ப நிலை தெர்மா ஸ்கேனர் கருவி மூலம் கண்ணடறிப்படுகிறது. இதன் அளவு நிலையாக இருந்தால் மட்டுமே ஓட்டளிக்க அனுமதிக்கப்படுவர். இதற்காக 2370 ஓட்டுச்சாவடிகளுக்கும் 2370 தெர்மா ஸ்கேனர் கருவி வழங்கப்பட்டுள்ளது.

இதோடு ஏழு தொகுதிகளிலும் 206 மிக பதட்டமான , 201 பதட்டமான ஓட்டுச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்கு ஆயுதம் தாங்கிய துணை ராணுவப்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுகின்றனர். எஸ்.பி., மேற்பார்வையில் ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை, சிறப்பு காவல்படை, சட்டம் ஒழுங்கு போலீஸ், ஊர்க்காவல்படை என 3510 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக 14,220 (500 மில்லி), 26,070 (100 மில்லி) கிருமி நாசினிகள், 26, 070 முகக்கவசங்கள், 1 லட்சத்து 56 ஆயிரத்து 420 மூன்றடுக்கு முகக்கவசங்கள், 71,100 ஈரடுக்கு முகக்கவசங்கள், 18 லட்சத்து 96 ஆயிரம் பாலிதீன் கையுறைகள், 30, 810 முழு உடை கவசம் உள்ளிட்ட உபகரணங்கள் தனித்தனியே தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காலை 7:00 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு இரவு 7:00 மணிக்கு முடியும் நிலையில்,கூட்டம் அதிகமானால் , டோக்கன் வழங்கப்பட்டு ஓட்டளிக்க அனுமதிக்கப்படுவார்கள் .........

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X