பொது செய்தி

தமிழ்நாடு

சுத்தப்படுத்திய பிறகே பள்ளிகள் ஒப்படைக்கப்படும்: சி.இ.ஓ.,

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
கோவை:தேர்தல் முடிந்ததும் பள்ளி வளாகம் முழுக்க, சுத்தப்படுத்திய பிறகே ஒப்படைக்கப்படவுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தெரிவித்தார்.சட்டமன்ற தேர்தல் இன்று நடக்கிறது. ஓட்டுச்சாவடி மையங்களாக அறிவிக்கப்பட்ட பள்ளிகளில், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்கள் மட்டும், பள்ளிக்கு

கோவை:தேர்தல் முடிந்ததும் பள்ளி வளாகம் முழுக்க, சுத்தப்படுத்திய பிறகே ஒப்படைக்கப்படவுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தெரிவித்தார்.சட்டமன்ற தேர்தல் இன்று நடக்கிறது. ஓட்டுச்சாவடி மையங்களாக அறிவிக்கப்பட்ட பள்ளிகளில், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்கள் மட்டும், பள்ளிக்கு வருவதால், கடந்த 31ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. தேர்தல் முடிந்ததும், வரும் 8ம் தேதி முதல், கற்பித்தல் பணிகள் துவங்க, கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
பொதுமக்கள் வாக்களிக்க வரும் முன்பு, வளாகம் முழுக்க, கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டிருக்கும். இதேபோல், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒப்படைத்ததும், வளாகம் முழுக்க துாய்மைப்பணிகள் மேற்கொண்ட பிறகு, தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகள் முறையாக நடப்பதை தலைமையாசிரியர்கள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா கூறுகையில், ''தேர்தல் முடிந்ததும் வளாகம் முழுக்க சுத்தம் செய்தபிறகே ஒப்படைக்கப்படும். அவ்வாறு சில இடங்களில் தவறினாலும், தலைமையாசிரியர்கள் சுத்தம் செய்ய, நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ''இப்பணிகள் முடிந்த பிறகே, மாணவர்கள் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X