பொது செய்தி

தமிழ்நாடு

கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி? சுற்றுச்சூழல் துறையில் சர்ச்சை!

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
சென்னை : தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், புதிதாக கருங்கல், கிரானைட் குவாரிகள் அனுமதிக்கான கோப்புகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில், சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அதனால், புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் அரசாணைகள் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டு

சென்னை : தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், புதிதாக கருங்கல், கிரானைட் குவாரிகள் அனுமதிக்கான கோப்புகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில், சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அதனால், புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் அரசாணைகள் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடு, மாநில அரசின் அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். இந்நிலையில், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் ஒப்புதல் கோரி, மார்ச்சில் ஒன்பது தனித்தனி நிகழ்ச்சி நிரல் தொகுப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில், 20க்கும் மேலான கருங்கல் குவாரிகள்; 10க்கும் மேலான கிரானைட் குவாரிகள் உட்பட, 100க்கும் மேற்பட்ட திட்டங்களின் கோப்புகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இந்த கோப்புகள் பரிசீலனைக்கு ஏற்கப்பட்டதா; அதில் முடிவுகள்எடுக்கப்பட்டதா என்பது, வெளிப்படையாக அறிவிக்கப் படவில்லை.இது குறித்து கட்டுமான துறையினர் கூறியதாவது:தேர்தல் நேரங்களில், இது போன்ற விஷயங்களில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் முடிவுகள் எடுப்பதில்லை. ஆனால், தற்போது, 100க்கும் மேற்பட்ட கோப்புகள் பரிந்துரைக்கப்பட்டதால், ஆன்லைன் முறையில் கூட்டம் நடத்தப்பட்டதா என, விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X