தமிழ்நாடு

மக்கள் நலன் சிந்திக்கும் வேட்பாளர்களுக்கு இன்றைக்கு கட்டாயம் போடுங்க ஓட்டு!...பொய் பேசி திரிவோருக்கு எடுப்போம் 'சுளுக்கு'

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 05, 2021
Share
Advertisement
கோவைக்கு சரியான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய, அனைத்து வாக்காளர்களும் இன்று வாக்களிப்பது அவசியம். தலைக்கு மேலே என்ன வேலை இருந்தாலும், முதலில் ஓட்டுப்போட்டு விட்டு, அடுத்த வேலையை பாருங்கள்.கல்வி, தொழில் வளர்ச்சி, பொருளாதாரம் என பல விஷயங்களிலும், நாட்டுக்கே முன் மாதிரியாக விளங்குகிறது கோவை. மத்திய, மாநில அரசுகளின் ஆதரவின்றி சுயமாக வளர்ந்த மாவட்டம் கோவை.இத்தகைய
 மக்கள் நலன் சிந்திக்கும் வேட்பாளர்களுக்கு இன்றைக்கு கட்டாயம் போடுங்க ஓட்டு!...பொய் பேசி திரிவோருக்கு எடுப்போம் 'சுளுக்கு'

கோவைக்கு சரியான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய, அனைத்து வாக்காளர்களும் இன்று வாக்களிப்பது அவசியம். தலைக்கு மேலே என்ன வேலை இருந்தாலும், முதலில் ஓட்டுப்போட்டு விட்டு, அடுத்த வேலையை பாருங்கள்.கல்வி, தொழில் வளர்ச்சி, பொருளாதாரம் என பல விஷயங்களிலும், நாட்டுக்கே முன் மாதிரியாக விளங்குகிறது கோவை. மத்திய, மாநில அரசுகளின் ஆதரவின்றி சுயமாக வளர்ந்த மாவட்டம் கோவை.
இத்தகைய கோவையில், தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில், கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும், எளிதில் தொழில் துவங்குவதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்க வேண்டுமென்பதே, இங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பு; தொழில் அமைப்புகளின் கோரிக்கை.நேர்மையான சமூக அக்கறையுள்ள மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால்தான், கோவையின் வளர்ச்சி தேக்கமடைவதாக, கோவை மக்கள் பலரும் சமூக ஊடகங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.உயரட்டும் ஓட்டு சதவீதம்!ஆனால் தகுதியான, தரமான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்கு, அரிதாகக் கிடைக்கும் வாக்களிக்கும் வாய்ப்பை, பலரும் நழுவ விடுகிறார்கள். கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு தேர்தலுக்கும், வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து கொண்டு வருவதே, இதை வெளிப்படுத்துகிறது.
உதாரணமாக, கோவை லோக்சபா தொகுதியில் 2009 தேர்தலில், 70.84 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன. அதுவே, 2014 தேர்தலில் 68.17 ஆகக் குறைந்தது; அது மேலும் குறைந்து, 2019 லோக்சபா தேர்தலில், 64.12 சதவீதம் மட்டுமே பதிவாகியிருந்தது.சட்டமன்றத் தேர்தலில், ஒவ்வொரு தேர்தலுக்கும் ஏற்றம் இறக்கமாகவுள்ளது. 2006 சட்டமன்றத் தேர்தலில், 70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அது 2001 தேர்தலை விட அதிகமாகும். அப்போது திருப்பூர் மாவட்டம் பிரிக்கப்படவில்லை.ஆனால், 2011 சட்டமன்றத் தேர்தலின்போது, திருப்பூர் மாவட்டம் பிரிக்கப்பட்டதால், தொகுதிகள் எண்ணிக்கை 14லிருந்து 10 ஆகக்குறைந்தது. அந்தத் தேர்தலில் 75.18 சதவீத வாக்குகள் பதிவாகின.
இது, 2016 சட்டமன்றத் தேர்தலில் 68.13 ஆகச்சரிந்தது. அதற்குப் பின் நடந்த லோக்சபா தேர்தலில், அது மேலும் குறைந்தது. கோவை மாவட்டத்திலுள்ள தொகுதிகளில், அதிகமான வாக்குகள் பதிவு செய்யும் பட்டியலில் மேட்டுப்பாளையம், சூலுார், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகள், முதல் மூன்று இடங்களைத் தொடர்ந்து தக்க வைக்கின்றன.நகரவாசிகளே...வெளியே வாருங்கள்!கோவை நகருக்குள் உள்ள தொகுதிகளில்தான், ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுப்பதிவு குறைந்து கொண்டே வருகிறது. அதிலும் முக்கியமாக, கோவை தெற்கு தொகுதிதான், மிகக்குறைவான ஓட்டுக்களைப் பதிவு செய்வதில் முதலிடத்தில் உள்ளது.
2011 சட்டமன்றத் தேர்தலில், 68.90 சதவீத ஓட்டுக்கள் பதிவான இந்தத் தொகுதியில், 2016 பொதுத்தேர்தலில், 61.91 சதவீதம் மட்டுமே ஓட்டுக்கள் பதிவாகின.கோவை வடக்கு தொகுதியும், சிங்காநல்லுாரிலும் கடந்த தேர்தலில் அதே, 61 சதவீத மக்கள்தான் தங்கள் ஓட்டுக்களைப் பதிவு செய்திருந்தனர். லேடீஸ்... இந்த சான்சை விட்டுறாதீங்க!கடந்த 20 ஆண்டுகளில் நடந்த, தேர்தல் புள்ளிவிபரங்களைப் பார்க்கையில், கோவை மாவட்டத்தில் பெண்களை விட ஆண்கள்தான், அதிகளவில் தங்கள் ஜனநாயகக்கடமையை ஆற்றி வருகின்றனர்.கடந்த தேர்தலில், 76.52 சதவீத ஆண் வாக்காளர்களும், 73.81 சதவீத பெண் வாக்காளர்களும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்திருந்தது ஓர் உதாரணம். அதற்கு முந்தைய தேர்தல்களிலும், பெண்களின் பங்களிப்பு அதை விட குறைவாகவே உள்ளது.
ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் கோவையில், 25லிருந்து 30 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யத் தவறுகின்றனர். தேர்தலின்போது, அரசியல்வாதிகள் பலரும், கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுவதால் ஏற்படும் விரக்தியும், வெறுப்பும் இதற்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. இவ்வாறு தேர்தலில் வாக்களிப்பதைப் புறக்கணிப்பதால், தகுதியில்லாத வேட்பாளர்கள் எளிதில் வெற்றி பெற்று விடுகின்றனர். இந்த முறையாவது, கோவை மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து, தவறானவர்களைத் தண்டிப்பது அவசியம்!. அவர்கள் வாக்கு தவறலாம்...நாம் வாக்களிக்கத் தவறக்கூடாது!-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X