சென்னை : 'ஜி.எஸ்.டி., ஆண்டு கணக்கு தாக்கல் செய்ய, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்' என, வணிகர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஜி.எஸ்.டி., என்ற, சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையில், வரி கணக்கு தாக்கல்செய்ய, பல்வேறு படிவங்கள் உள்ளன. இதில், ஆண்டு முழுவதுக்கும், ஒரே கணக்கு தாக்கல் செய்ய, 'படிவம் - 9' உள்ளது.ஆண்டுக்கு, ௨ கோடி ரூபாய்க்கு மேல், வரவு செலவு உள்ளவர்கள், படிவம் - 9யையும், 5 கோடி ரூபாய்க்கு மேல் வரவு, செலவு உள்ள நிறுவனங்கள், 'படிவம் - 9ஏ, 9சி'யையும் தாக்கல் செய்ய வேண்டும்.கடந்த, 2019 - 20ம் நிதியாண்டுக்கான, படிவம் - 9, 9 - சி தாக்கல் செய்வதற்கான அவகாசம், மார்ச்சுடன் நிறைவடைந்தது. தற்போது, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, வணிகர்கள் கூறியதாவது: கொரோனா உட்பட,பல்வேறு சூழ்நிலைகளால், ஜி.எஸ்.டி., ஆண்டு கணக்கு தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. ஏற்கனவே, பல முறை அவகாசம் வழங்கி, மார்ச் மாதத்துடன் நிறைவடைந்துள்ளது. மேலும், ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால், வணிகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE