எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா அமோகம்

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
தமிழகம் முழுதும், தேர்தல் கமிஷன் கண்காணிப்பை மீறி, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., சார்பில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா அமோகமாக நடந்தது. தமிழகத்தை பொறுத்தவரை, உள்ளாட்சி, சட்டசபை, லோக்சபா தேர்தல் என, எந்த தேர்தலாக இருந்தாலும், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவது, சர்வ சாதாரணமாகி விட்டது.ஒவ்வொரு தேர்தலிலும், வாக்காளர்களுக்கு வழங்கப்படும், பணத்தின்
TN election 2021, ADMK, DMK, voters, amount, பணப்பட்டுவாடா, வாக்காளர்கள்

தமிழகம் முழுதும், தேர்தல் கமிஷன் கண்காணிப்பை மீறி, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., சார்பில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா அமோகமாக நடந்தது.

தமிழகத்தை பொறுத்தவரை, உள்ளாட்சி, சட்டசபை, லோக்சபா தேர்தல் என, எந்த தேர்தலாக இருந்தாலும், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவது, சர்வ சாதாரணமாகி விட்டது.ஒவ்வொரு தேர்தலிலும், வாக்காளர்களுக்கு வழங்கப்படும், பணத்தின் மதிப்பும், அதிகரித்தபடியே உள்ளது.

பணப்பட்டுவாடாவை தடுக்க, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், அது பலனளிப்பதாக இல்லை.எப்போது பணம் தருவர் என, மக்கள் எதிர்பார்ப்பதும், பணம் கொடுப்பதை தடுத்து நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட கட்சி ஆட்சிக்கு வந்தால், தங்களுக்கு சிக்கலாகும் என, உள்ளூர் அதிகாரிகள் பயப்படுவதும், கட்சியினருக்கு கொண்டாட்டமாக உள்ளது.

இந்த தேர்தலில், வழக்கம் போல பணப் பட்டுவாடாவை தடுக்க, தேர்தல் கமிஷன், பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு அமைத்து, வாகன சோதனை நடத்துதல், வங்கி பரிவர்த்தனை கண்காணிப்பு, வருமான வரி சோதனை என, தீவிரப்படுத்தியது.

இதுகுறித்து சிறிதும் கவலைப்படாத, அரசியல் கட்சியினர், அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி இருந்தனர். நேற்று முன்தினம், அ.தி.மு.க., - தி.மு.க., சார்பில் பணப்பட்டுவாடா துவங்கியது.அ.தி.மு.க., சார்பில், பெரும்பாலான தொகுதிகளில், ஓட்டுக்கு, 500 ரூபாய் வழங்கப்பட்டது. சில தொகுதிகளில், 1,000 ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், 200 ரூபாய் மட்டுமே வழங்கினர்.அதேபோல, அ.தி.மு.க.,வுக்கு இணையாக, தி.மு.க., தரப்பிலும், 500 ரூபாய் வழங்கப்பட்டது. சில தொகுதிகளில், 1,000 ரூபாய் வழங்கப்பட்டது.

தி.மு.க., கூட்டணி கட்சிகளும், தி.மு.க.,வுக்கு இணையாக பணப்பட்டுவாடா செய்தன. ஆனால், அ.தி.மு.க., கூட்டணி கட்சியான பா.ம.க., சார்பில், சில தொகுதிகளில், 300 ரூபாய் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.கடந்த தேர்தல்களில், 30 முதல், 40 சதவீதம் பேருக்கு மட்டும், ஓட்டுக்கு பணம் வழங்கப்பட்டது. இம்முறை, 70 சதவீதம் பேருக்கு பணம் வழங்கப்பட்டதாக, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு அடுத்தபடியாக, சில தொகுதிகளில், அ.ம.மு.க., சார்பில், 300 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும், பணத்தை வாரி இறைத்துள்ள நிலையில், மக்கள் என்ன முடிவெடுக்கப் போகின்றனர் என்பது, மே, 2ல் தான் தெரியும்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஏப்-202117:28:41 IST Report Abuse
ஆப்பு புடி பட்டது 412 கோடி... புடி படாமகொடுக்கப்பட்டது 4000 கோடி. தமிழக மக்களுக்கு வேட்டை. இனிமே 2024 லதான் கிடைக்கும்.
Rate this:
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
06-ஏப்-202114:35:03 IST Report Abuse
A.Gomathinayagam வாக்கிற்கு பணம் என்பது பல ஆண்டுகளாக தமிழகத்தில் தொடர்வது தான், ஆதி காலத்தில் ஐந்து ரூபாய் கொடுத்தார்கள் , இப்பொழுது ஐநூறு, ஆயிரம் கொடுக்கிறார்களில் கொடுக்கிறதையும் வாங்குவதையும் எந்த கட்சியாலும், தேர்தல் ஆணையதாலும் முடியாமல் இன்றும் தொடர்வது தான் மறுக்க முடியாத உண்மை
Rate this:
Cancel
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
06-ஏப்-202110:21:33 IST Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN சும்மா எல்லாம் சொல்லாதீங்க சார். எனக்கெல்லாம் எந்த கட்சியுமே பணம் கொடுக்கலே. நான் எனது 21 வயதில் இருந்தே தவறாமல் எல்லா தேர்தல்களிலும் வோட்டு போட்டு இருக்கிறேன். ஆனால் ஒரு தடவை கூட கருத்து கணிப்புக்கு என்கிட்டே வந்ததே இல்லை தெரியுமா. நானும் எனக்கு தெரிஞ்சவங்க கிட்டே எல்லாம் கேட்டு பார்த்துட்டேன். அவங்களும் அவங்க கிட்டே கருத்து கணிப்புக்கு வந்தது இல்லைன்னு சொல்லாறங்க. பின்னே யார் யார் கிட்டே கருத்து கணிப்பு நடத்தினாங்கன்னு லிஸ்ட் வாங்கி தரமுடியுமா?.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X