புதுடில்லி : தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுடன், 'ஆன்லைன்' வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடி நாளை கலந்துரையாடி, ஆலோசனை கூறவுள்ளார்.
'பரிக் ஷா பே சர்ச்சா' எனப்படும், 'தேர்வுகள் பிரச்னை அல்ல' என்ற தலைப்பில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுடன், 2018 முதல், பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி வருகிறார்.நடப்பு ஆண்டில், மாணவர்களுடனான கலந்துரையாடல், 'ஆன்லைன்' வாயிலாக நாளை நடக்கிறது. இதுகுறித்து, பிரதமர் வெளியிட்டு உள்ள 'டுவிட்டர்' பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது: பல கேள்விகளுடன் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்கும், 'பரிக் ஷா பே சர்ச்சா' நிகழ்ச்சி, நாளை இரவு, 7:00 மணிக்கு நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனுடன் வெளியிட்டுள்ள, 'வீடியோ'வில் பிரதமர் கூறும்போது, 'உங்களை நேரில் சந்தித்து கலந்துரையாட, ஆவலாக இருக்கிறேன். 'ஆனால், கடந்த ஓராண்டாக நாம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருப்பதால், அது முடியவில்லை. எனவே, நம் கலந்துரையாடல் ஆன்லைன் வாயிலாக நடக்கிறது' என, தெரிவித்துஉள்ளார். அத்துடன், 'வாழ்வின் கனவுகளை நிறைவேற்ற விரும்பும் மாணவர்கள், தேர்வுகளை ஒரு வாய்ப்பாக கருத வேண்டும்' என்றும், பிரதமர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE