சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்றால் பத்திரிகையாளர் மரணம்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
சென்னை : பிரசித்தி பெற்ற, பி.டி.ஐ., நிறுவனத்தின் செய்தி சேகரிப்பாளரும், உதவி ஆசிரியருமான ஸ்ரீகாந்த், 53, கொரோனா தொற்றால் மரணமடைந்தார். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை, தமிழகத்தில், 30 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பிரபல செய்தி நிறுவனமான, 'பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா'வின், சென்னை பிரிவு மூத்த

சென்னை : பிரசித்தி பெற்ற, பி.டி.ஐ., நிறுவனத்தின் செய்தி சேகரிப்பாளரும், உதவி ஆசிரியருமான ஸ்ரீகாந்த், 53, கொரோனா தொற்றால் மரணமடைந்தார்.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை, தமிழகத்தில், 30 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பிரபல செய்தி நிறுவனமான, 'பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா'வின், சென்னை பிரிவு மூத்த செய்தியாளரும், உதவி ஆசிரியருமான வி.ஸ்ரீகாந்த், 53, கொரோனா தொற்றால் மரணமடைந்தார்.சென்னை, குரோம்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், மார்ச், 29ல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

சென்னையில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரின்இறுதிச் சடங்கு நேற்று நடந்தது. மறைந்த ஸ்ரீகாந்திற்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X