ஓட்டு போட போறீங்களா... பூத் ஸ்லிப் கட்டாயமில்லை!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு போட போறீங்களா... பூத் ஸ்லிப் கட்டாயமில்லை!

Added : ஏப் 05, 2021
Share
கோவை:இன்று ஓட்டுப்போட செல்பவர்கள், தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ள 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து ஓட்டுப்போடலாம்.இன்று காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி, இரவு 7:00 மணி வரை நடைபெறுகிறது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், ஓட்டுப்போட செல்லும் போது தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ள ஆதார் அட்டை, பான்கார்டு, டிரைவிங் லைசன்ஸ், போட்டோவுடன் கூடிய பென்ஷன் புத்தகம்,

கோவை:இன்று ஓட்டுப்போட செல்பவர்கள், தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ள 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து ஓட்டுப்போடலாம்.இன்று காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி, இரவு 7:00 மணி வரை நடைபெறுகிறது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், ஓட்டுப்போட செல்லும் போது தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ள ஆதார் அட்டை, பான்கார்டு, டிரைவிங் லைசன்ஸ், போட்டோவுடன் கூடிய பென்ஷன் புத்தகம், வங்கி அல்லது தபால் அலுவலகத்தால் வழங்கப்பட்டுள்ள, போட்டோவுடன் கூடிய கணக்கு புத்தகம், தேசிய ஊரக உறுதியளிப்பு அடையாள அட்டை, அரசு ஊழியர்களுக்கான அடையாள அட்டை, தொழிலாளர் நலத்துறையால் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை, மக்கள் தொகை பதிவேடால் வழங்கப்பட்ட, ஸ்மார்ட் கார்டு மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கான அடையாள அட்டை ஆகியவற்றில், ஏதாவது ஒன்றை காண்பித்து, அரசால் வழங்கப்பட்டுள்ள பூத் சிலிப்பை கையில் எடுத்துச்சென்று ஓட்டுப்போடலாம். பூத் ஸ்லிப் இல்லாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் போதும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X