பொது செய்தி

இந்தியா

சில வரி செய்திகள் - இந்தியா

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
ஆதித்யநாத்துக்கு தடுப்பூசி லக்னோ: உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள மருத்துவமனையில், முதல்வர் யோகி ஆதித்யநாத், நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அவர் வெளியிட்டுள்ள, 'டுவிட்டர்' பதிவில், 'தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். உ.பி.,யை கொரோனா இல்லாத மாநிலமாக மாற்ற, ஒன்றிணைவோம்' என, கூறியுள்ளார். அமைச்சருக்கு கொரோனா மும்பை: மஹாராஷ்டிரா

ஆதித்யநாத்துக்கு தடுப்பூசி

லக்னோ: உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள மருத்துவமனையில், முதல்வர் யோகி ஆதித்யநாத், நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அவர் வெளியிட்டுள்ள, 'டுவிட்டர்' பதிவில், 'தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். உ.பி.,யை கொரோனா இல்லாத மாநிலமாக மாற்ற, ஒன்றிணைவோம்' என, கூறியுள்ளார்.


அமைச்சருக்கு கொரோனா

மும்பை: மஹாராஷ்டிரா நீர்வளத் துறை அமைச்சர் சங்கர்ராவ் கடாக், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்த, அவரது நேற்றைய, 'டுவிட்டர்' பதிவில், 'வைரஸ் பாதிப்பால் வீட்டில் தனிமையில் உள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், கண்டிப்பாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்' என, கூறியுள்ளார் .

அக் ஷய் குமார் 'அட்மிட்'

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில், கொரோனா பாதிப்பிற்கு உள்ளான பிரபல ஹிந்தி நடிகர் அக் ஷய் குமார், 53, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் நேற்று வெளியிட்டுள்ள, 'டுவிட்டர்' பதிவில், 'டாக்டர்கள் பரிந்துரையின்படி, மருத்துவமனையில் உள்ளேன். நலமுடன் இருக்கும் நான், விரைவில் வீடு திரும்புவேன்' என, கூறியுள்ளார்.

நடிகர் அஜாஸ் கான் பாதிப்பு

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில், பாலிவுட் நடிகரான அஜாஸ் கான், போதைப்பொருள் கடத்தல் வழக்கில், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால், கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். சிறை காவலில் இருக்கும் அஜாஸ் கான், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் நேற்று கூறினர். இதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஐ.ஐ.டி., மாணவர் 'சஸ்பெண்ட்'

கவுஹாத்தி: அசாமின் கவுஹாத்தி ஐ.ஐ.டி.,யில், சக மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மாணவரை, சமீபத்தில், போலீசார் கைது செய்தனர். நன்னடத்தை குழு பரிந்துரையின்படி கைதான மாணவரை, 'சஸ்பெண்ட்' செய்து, ஐ.ஐ.டி., நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. பாலியல் துன்புறுத்தல் புகாரில், மேலும் நான்கு மாணவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

பிரபல மலையாள நடிகர் மரணம்

கோட்டயம்: கேரளாவின் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தைச் சேர்ந்த, பி.பாலசந்திரன், 69, மலையாள சினிமாவின் புகழ் பெற்ற திரைக்கதை ஆசிரியராக இருந்தார். சிறந்த நாடக ஆசிரியருக்கான, சாகித்ய அகாடமி விருது பெற்ற இவர், திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சில மாதங்களாக, உடல்நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த அவர், நேற்று மரணம் அடைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X