பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி அலுவலர்களை பாதுகாக்க கவச உடைகள்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
சூலூர்:சூலூர் சட்டசபை தொகுதியில், இன்று 3 லட்சத்து, 17 ஆயிரத்து, 218 வாக்காளர்கள் ஓட்டுப்போடவுள்ளனர். இதற்காக, தொகுதியில், 32 மண்டலங்களில், 463 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்தல் பணியில், 2,124 அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர். ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்ப வேண்டிய பொருட்கள் மற்றும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், நேற்று சூலூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து லாரிகளில், பலத்த
 ஓட்டுச்சாவடி அலுவலர்களை பாதுகாக்க கவச உடைகள்

சூலூர்:சூலூர் சட்டசபை தொகுதியில், இன்று 3 லட்சத்து, 17 ஆயிரத்து, 218 வாக்காளர்கள் ஓட்டுப்போடவுள்ளனர். இதற்காக, தொகுதியில், 32 மண்டலங்களில், 463 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்தல் பணியில், 2,124 அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர். ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்ப வேண்டிய பொருட்கள் மற்றும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், நேற்று சூலூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து லாரிகளில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன.தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி முன்னிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவங்கியது. அங்கு வந்த தேர்தல் பார்வையாளர் ஸ்வரசிஷ்தா சோமவன்ஷி, பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.கொரோனா தடுப்பு உபகரணங்கள்இந்த தேர்தலில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.அலுவலர்களுக்கு கவச உடைகள், கையுறைகள் வழங்கப்படுகின்றன. வாக்காளர்களின் உடல் வெப்பத்தை, பரிசோதிக்கும் கருவியும் வழங்கப்பட்டுள்ளது.ஓட்டுப்பதிவுக்கு வரும் வாக்காளர்கள், கைகளை சுத்தம் செய்து கொள்ள சானிடைசரும், கையுறைகளும் வழங்கப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X