விபத்து அபாயம்கவுண்டம்பாளையம், எஸ்.கே.ஆர். நகர், இரண்டாவது வீதி திருப்பத்தில், திறந்த நிலையில் உள்ள, சாக்கடை கால்வாயில், வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் நிலவுகிறது. இக்கால்வாய்க்கு சிலாப் அமைக்க வேண்டும்.- கார்த்தி, கவுண்டம்பாளையம்.
சாலை மோசம்ஒண்டிப்புதுார், தாகூர் நகரில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.- ஜெயசந்திரன், ஒண்டிப்புதுார்.
குப்பைக்கு தீ; மக்கள் திணறல்சத்தி ரோடு, சரவணம்பட்டி, புரோசோன் மால் பின்புறம், குடியிருப்புகளுக்கு மத்தியில், சாலையோரம், குப்பை குவிக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது; புகையால் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர்.- சத்தியமூர்த்தி, சரவணம்பட்டி.
இறைச்சிக்கழிவால் துர்நாற்றம்அப்பநாயக்கன்பட்டி - சித்தநாயக்கன்பட்டி ரோட்டில், கோழிகழிவு குவிக்கப்படுகிறது; இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவை கொட்டுவோர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பிரகாஷ், சித்தநாயக்கன்பட்டி.
பிரதான சாலையில் குழிசத்தி ரோடு, சரவணம்பட்டி பிரதான சாலையில், குடிநீர் குழாய் உடைந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இப்பள்ளத்தில், வாகன ஓட்டிகள் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.- மோகன்ராஜ், சரவணம்பட்டி.
சுகாதார சீர்கேடு;மக்கள் அவதிவெள்ளலுார் பேரூராட்சிக்கு உட்பட்ட, அசோகர் வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கியுள்ளது.- தங்கராஜ்,
வெள்ளலுார்.
சாக்கடை கால்வாயை துார்வாரணும்ரத்தினபுரி, மருதகுட்டி நகர், முகமது அலி வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவு தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இக்கால்வாயை துார்வார வேண்டும்.- சதீஷ்குமார், மருதகுட்டி நகர்.
துாய்மை பணியாளர்கள் வருவதில்லைமாநகராட்சி, 32வது வார்டுக்கு உட்பட்ட, சேரன்மாநகர், ஏழாவது பஸ் ஸ்டாப் பகுதிக்கு, துாய்மை பணியாளர்கள் வருவதில்லை. இப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, கொசு உற்பத்தியாகிறது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- குணா, சேரன் மாநகர்.
குப்பை தொட்டி தேவைமாநகராட்சி, 40வது வார்டுக்கு உட்பட்ட, ஆவாரம்பாளையம், மகாத்மா காந்தி ரோடு, ஏழாவது வீதி சந்திப்பில், குப்பைத்தொட்டி இல்லாததால், சாலையோரம் குப்பை குவிக்கப்படுகிறது. இப்பகுதியில் குப்பை தொட்டி வைக்க வேண்டும்.- வரதராஜன், ஆவாரம்பாளையம்.
குப்பை குவியல்கோவைபுதுார், சரஸ்வதி நகரில், முறையாக துாய்மை பணி மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால், இப்பகுதியில், சாலையோரம் குப்பை குவிகிறது; சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.- குமார், கோவைபுதுார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE