சென்னை : தமிழகத்தில், நேற்று முன்தினம் வரை, 434 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் மட்டும்,4.75 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டசபை தேர்தலில், பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க, தேர்தல் கமிஷன் பல நடவடிக்கைகளை எடுத்தது. அதையும் மீறி, அரசியல் கட்சிகள், வாக்காளர் களுக்கு பணப் பட்டுவாடா செய்தன.சில இடங்களில், பணப்பட்டுவாடா செய்தவர்கள், ரொக்கப் பணத்துடன் பிடிபட்டனர். அந்த வகையில், நேற்று முன்தினம் மட்டும், 4.75 கோடி ரூபாய், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக, நேற்று முன்தினம் வரை, 230.27 கோடி ரூபாய் ரொக்கம்; 5.14 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.87 லட்சம் லிட்டர் மதுபானம்; 2.20 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா.
மேலும், 176.22 கோடி ரூபாய் மதிப்புள்ள, தங்கம், வைரம், வெள்ளி; 20.08 கோடி ரூபாய் இதர பொருட்கள் என, மொத்தம், 433.92 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தில், 57.70 கோடி ரூபாய்; கோவையில், 55.48 கோடி ரூபாய்; சேலத்தில், 44.80 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா தொடர்பாக, 'சி விஜில்' மொபைல் ஆப் வழியே வந்த புகார்களில், 3,991 சரியானவை. கரூர் மாவட்டத்தில் இருந்து, அதிகபட்சமாக புகார்கள் வந்துள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE