கொரோனா 2வது அலை எதிரொலி

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைய துவங்கி இருப்பதை அடுத்து, மஹாராஷ்டிரா, பஞ்சாப், டில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டதும், நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கடந்த ஆண்டு மார்ச்சில் மூடப்பட்டன. பல மாதங்களாக, 'ஆன்லைன்' வாயிலாக மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே கல்வி

புதுடில்லி : கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைய துவங்கி இருப்பதை அடுத்து, மஹாராஷ்டிரா, பஞ்சாப், டில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டதும், நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கடந்த ஆண்டு மார்ச்சில் மூடப்பட்டன. பல மாதங்களாக, 'ஆன்லைன்' வாயிலாக மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே கல்வி பயின்று வந்தனர். தொற்று பரவல் குறையத் துவங்கியதை அடுத்து, கடந்த ஆண்டு அக்., முதல், படிப்படியாக பள்ளிகள் செயல்படத் துவங்கின.ஒரு சில மாநிலங்களில், 1 முதல் 12ம் வகுப்பு வரையிலும், சில மாநிலங்களில், 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.இந்நிலையில், கொரோனா பரவலின் இரண்டாவது அலை, இரண்டு வாரங்களாக தீவிரமடைந்துள்ளது.

முன் எப்போதும் இல்லாத வகையில், நேற்று ஒரே நாளில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானது.மஹாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில், தொற்று பரவல் தீவிரமாக உள்ளன. இதையடுத்து, மஹாராஷ்டிராவில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளை தவிர, அனைத்து வகுப்புகளுக்கும் காலவரையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பஞ்சாபில், வரும், 10ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில், மறு உத்தரவு வரும் வரை, பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இவை தவிர, உத்தர பிரதேசம், பீஹார், சத்தீஸ்கர், குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும், பள்ளிகளுக்கு தற்காலிகமாக விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X