கோவை : 'நம் கலை, கலாசாரம், பாரம்பரியத்தை காப்பவர்களுக்கு ஓட்டளியுங்கள்' என, கோவை காமாட்சி புரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமி கள், வாக்காளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்த அறிவுரை:ஆன்மிக பூமியாக, தமிழகம் திகழ்கிறது. இருப்பினும், அண்மைக் காலமாக கடவுள் இல்லை என்று சொல்லும் கூட்டம், மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறது. மக்கள் அனைவரும், ஏதாவது ஒரு மதத்தை சார்ந்தே வாழ்கின்றனர். மதங்களை புண்படுத்தாதவர்களே, அரசாள்பவர்களாக இருப்பது சிறந்தது. இந்தியாவின் கண்களாக இருப்பது தமிழகம். நமது ஓட்டு, நம் பாரம்பரிய கலை, கலாசாரம், பண்பாடு உள்ளிட்டவற்றை காக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.தேர்தல் மூலம் நல்லவர்களை தேர்வு செய்து, நாட்டை அமைதியான வழியில் கொண்டு செல்வதே, நம் ஒவ்வொருவரின் கடமை.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE