பொது செய்தி

தமிழ்நாடு

எங்கு பார்த்தாலும் 'தேர்தல் காய்ச்சல்' வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
அன்னூர்:தேர்தல் பணி காரணமாக, அனைத்து அரசு அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.இன்று சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு முந்தைய நாள் காலையில், சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடிகளில் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதையடுத்து, பி.டி.ஓ., துணை பி.டி.ஓ., உதவி பொறியாளர், உதவியாளர்,

அன்னூர்:தேர்தல் பணி காரணமாக, அனைத்து அரசு அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.இன்று சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு முந்தைய நாள் காலையில், சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடிகளில் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதையடுத்து, பி.டி.ஓ., துணை பி.டி.ஓ., உதவி பொறியாளர், உதவியாளர், மேற்பார்வையாளர் என 44 பேர் பணி புரியும் அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நேற்று இருவர் மட்டுமே பணியில் இருந்தனர். 42 பேர் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டதால், அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் வேளாண் துறை அலுவலகம், தோட்டக்கலை துறை அலுவலகம் ஆகியவற்றிலும் யாரும் பணிக்கு வரவில்லை. தாலுகா அலுவலகத்தில் குறைந்த அளவு ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். அவர்களும் தேர்தல் தொடர்பான பணியில் ஈடுபட்டதால், வழக்கமான பணிக்கு அலுவலத்திற்கு வந்தவர்கள் திரும்பிச் சென்றனர்.அன்னூரில் உள்ள நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் நேற்று மூடப்பட்டிருந்தது. அலுவலக ஊழியர்கள் தேர்தல் பணிக்கு சென்றதால், அலுவலகம் மூடப்பட்டிருந்தது. காப்பீடு செய்ய வந்த வாடிக்கையாளர்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X